உடல் எடையை அதிகரிக்கச் சொன்ன இயக்குனர் :- அதிர்ந்துபோன சிம்பு!
சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் பத்து தல. இந்த திரைப்படத்தில் முதலில் சிம்பு கௌரவத் தோற்றத்தில் தான் நடிப்பதாக இருந்தது.
பின்பு சில காரணங்களால் சிம்புவின் கதாபாத்திரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தொடங்கி வேகமாக சென்று கொண்டிருந்த பொழுது கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் சிம்பு மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு படத்தில் பிஸியாகிவிட்டார். அதனால் முதலில் கௌதம் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க படக்குழு முடிவு செய்தது.
தற்போது கௌதம் கார்த்திக் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. அதனால் இயக்குனர் சிம்புவை சந்தித்து பத்து தல திரைப் படத்தின் மீதி காட்சிகளில் நடிக்க கேட்டுள்ளார்.
மேலும் சிம்பு உடல் குண்டாக இருந்த பொழுது சில காட்சிகள் படமாக்கப் பட்டு விட்டதால், தற்போது உடல் மெலிந்து இருக்கும் சிம்புவை 20 கிலோ வரை எடை ஏற்றுமாறு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிம்பு இயக்குனரிடம் இப்பொழுது எவ்வளவோ டெக்னாலஜி வந்துவிட்டது அதனால் எடையை ஏற்றி நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு சம்மதித்த இயக்குனர் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் சிலம்பரசன் கேங்க்ஸ்டர் ஆகவும் கௌதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர்.
சிம்புவின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் நிலையில் பத்துதலை திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது.