பிரபலங்கள் குடியிருக்கும் ஏரியாவிற்கு குடியேறவிருக்கும் லேடி சூப்பர்ஸ்டார்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
மேலும் தனது படங்களை முடித்த பின் நயன்தாரா தனது காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
நயன்தாரா தற்போது எழும்பூரில் உள்ள பிளாட்டில் வசித்து வருகிறார், தற்போது அதை விட சிறந்த வீட்டில் வசிக்க வீடு தேடியதாக கூறப்படுகிறது.
பின்னர் போயஸ் கார்டனில் எழும்பி வரும் பிரமாண்ட அபார்ட்மென்டில் இரண்டு பிளாட்-யை புக் செய்துள்ளார் நயன்தாரா. இரண்டுமே நான்கு படுக்கையறைகள் கொண்டதாம்.
தற்போது முடியுற நிலையில் இருக்கும் அந்த கட்டிடம், அவரின் கல்யாணத்திற்கு பின் குடியேற அந்த வீடு தயாராகிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நடிகை நயந்தாராவும் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது வீடுகள் இருக்கும் போயஸ் கார்டன் ஏரியாவில் விரைவில் குடியேறவுள்ளார்.