பார்திபன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக வந்த தகவல் உண்மையா?
பார்த்திபன் என்றாலே ஒரு வித்தியாசமான கதை, வசனம், இயக்கம் இருக்கும் என்பது அனைவராலும் எதிர்பார்க்ககூடிய விடயம்.
அவ்வகையில், பிரபல நடிகர் ஒருவரை பார்திபன் இயக்கபோகிறார் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும்.
ஆம்... அந்த நடிகர் யாருமல்ல நம்ம இழையதளபதி விஜைதான். அதுவும் பார்திபனே கூறியிருக்கிரறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்க தனக்கு ஆசையாக உள்ளது என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
அவருக்கு கதை சொல்லி ஓகே வாங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு கூறியுள்ளது விஜய் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. பீஸ்ட் படம் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. இந்தப் படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டவர்கள் வில்லனாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
ரசிகர்கள் ஆர்வம் இதையடுத்து அடுத்தடுத்த படங்களுக்கு கதைகளை கேட்டு வருகிறார் விஜய். இந்நிலையில் பார்த்திபன் இவ்வாறு தெரிவித்துள்ளது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. வம்சி இயக்கத்திற்கு பிறகு விஜய் பார்த்திபன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாரா என்பது குறித்து இப்போதே ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனா.