நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் 27-11-2021

#TamilCinema #Actor
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் 27-11-2021

உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் ஆவர். இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார். இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

விசய், திரிசா நடித்த குருவி எனும் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். உதயநிதி ஸ்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.

அரசியல் பிரவேசம்

திரைப்பட நடிப்பில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி இசுடாலின், மார்ச்சு மாதம் 2018 இல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன் ; ஸ்டாலின் மகனாக, அவரின் அரசியல்வாரிசாக அரசியலுக்கு வரவில்லை. தொண்டர்களோடு தொண்டர்களாகவே இருக்க விரும்புகிறேன், எந்த ஒரு கட்சி பதவியும் தேவையில்லை.

பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. திமுக வின் கடைக்கோடி தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். இனி என்னை அடிக்கடி திமுக மேடைகளில் காணலாம் எனக் கூறினார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஒரு ஆண்டாக முழு நேர அரசியலில் ஈடுபட்டார். 04.07.2019 அன்று திமுக இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார்.

இந்தச் செய்தி இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வமாக 04.07.2019 அன்று காலை 11:00 மணி்க்கு மேல் தெரிவிக்கப்பட்டது.

முதலில் பதவிவேண்டாம் என மறுத்த உதயநிதி ஸ்டாலின், தொண்டர்களின் அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் மட்டுமே பதவியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

 

 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!