மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் பாவனா
தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த பிரபலமானவர் நடிகை பாவனா. இவர் தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி என பல படங்களில் நடித்துள்ளார்.
பாவனா திருமணத்திற்கு பிறகு கன்னட பட மொழிகளில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவர் கன்னடத்தில் நடித்த கோவிந்தா கோவிந்தா என்ற படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் சுமந்த் சைலேந்திராவுக்கு ஜோடியாக பாவனா நடிக்கிறார்.
பாவனா கடந்த 2015 இல் படப்பிடிப்பு முடிந்து காரில் திரும்பிக் கொண்டிருக்கும் போது கேரள மாநிலம் கொச்சி அருகே கடத்தப்பட்டார்.
அவரை கடத்திய கும்பல் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வீடியோ எடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
பாவனா அளித்த வாக்குமூலத்தின் படி மலையாள நடிகரான திலிப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு திலீப் ஜாமீன் பெற்று வெளியில் வந்தார்.
மலையாள நடிகை காவ்யா மாதவன் உடன் திலீப் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை பாவனா, திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியருக்கு அனுப்பியதாகவும் இதனால் இருவருக்கும் விவாகரத்து ஆனதாக கூறப்படுகிறது.
இதனால் முன்விரோதம் காரணமாக திலீப், பாவனாவை ஆள் வைத்து கடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் சிலரிடம் விசாரிக்க உள்ளதால் தீர்ப்பு என்னும் வராமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது பாவனா மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க உள்ளார். இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.