மாநாடு தெலுங்கில் டப்பிங் செய்ய சொன்ன சிம்பு..
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா நடிப்பில் கடந்த 25ஆம் தேதி வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அரங்கம் முழுவதும் கைத்தட்டல் சத்தத்தோடு இருந்தது.
மாநாடு படம் கடந்த 5 நாட்களில் 30 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. மாநாடு படத்தின் மொத்த பட்ஜெட்டே 30 கோடிகள் தான் அடங்கும். இதனால் இனிவரும் வசூல் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு லாபம்தான்.
மாநாடு படம் வட இந்தியாவில் மட்டும் 1333 தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாநாடு படம் தமிழில் வெளியாகும் அதேநாளில் தெலுங்கிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. மாநாடு படம் ரிலீசுக்கு முதல்நாள் நாளை படம் ரிலீஸ் ஆகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.
பின்பு எல்லா பிரச்சினைகளும் தீர்த்த மறுநாள் மாநாடு படம் தமிழில் மட்டும் ரிலீசானது. சிம்பு, மாநாடு படத்தை தெலுங்கில் டப் செய்ய தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதனால் மாநாடு படம் தெலுங்கில் டப்பிங் செய்து தயாராக இருந்தது.
தெலுங்கில் மாநாடு படம் வெளியானால் சிம்புக்கு நல்ல மார்க்கெட் உருவாகும் என காத்திருந்த நிலையில் தெலுங்கில் வெளியாகாமல் போனது. மாநாடு படம் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டால் நல்ல வரவேற்பை பெற்றாலும் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்காது.
இதனால் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தை தெலுங்கு ரீமேக் உரிமைக்கு விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் மாநாடு படத்தை ரீமேக் செய்ய உள்ளாராம்.
இவ்வாறு ரீமேக் செய்யும் படங்கள் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறிதான்.