கமல் ஹாசன் உடல் ந‌லம் பற்றி வந்த பவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் நீதி மையம்.

#TamilCinema #Actor
Prasu
3 years ago
கமல் ஹாசன் உடல் ந‌லம் பற்றி வந்த பவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் நீதி மையம்.

நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் இருந்து திரும்பிய அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக கூறப்படும் வதந்திகளுக்கு மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் ஒரு பிசினசை துவக்குவதற்காக அவர் சென்றிருந்த நிலையில் கடந்த வாரத்தில் அவர் நாடு திரும்பினார்.

சென்னை திரும்பியவுடன் அவர் தன்னை பரிசோதித்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தினார்.

அவர் தற்போது ஸ்ரீ ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ரஜினிகாந்த்தும் கமலிடம் தொலைபேசி மூலம் பேசி அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில் கமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்த புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த தகவலில் உண்மை இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியாகி பரவிவரும் புகைப்படம் பழைய புகைப்படம் என்றும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது தகவல் வெளியிட்டு வருகிறது. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் கூறப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!