யார் இந்த விஜய்சேதுபதி ? விஜய்சேதுபதி நடந்து வந்த பாதையில் காலில் இவ்வளவு முட்கள் குத்தியதா?

#Actor
Prasu
3 years ago
யார் இந்த விஜய்சேதுபதி ?  விஜய்சேதுபதி நடந்து வந்த பாதையில் காலில் இவ்வளவு முட்கள் குத்தியதா?

ஆம்... 
ஒரு துறையில் சாதிப்பது இலகுவான விடயம் அல்ல. அப்படி மிக கடின உழைப்பால் சினிமாவில் சாத்திதவர்களில் விஜய்சேதுபதியும் ஒருவர். அவ்வகையில் அவரது வாழ்க்கை வரலாற்றை தருவதில் லங்கா4.கொம் பெருமைகொள்கிறது.
ஆம்.. விஜய் சேதுபதி ஒரு தமிழ் திரைப்பட நடிகர். 
இவர் இராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் வாழ்க்கையை கணக்காளராக தொடங்கினார். 
கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்பு பணியை தேர்ந்தெடுத்தார். 2010ல் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னனி கதை மாந்தராக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார். இவர் பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012) போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் படிப்பை விருதுநகர் மாவட்டத்திலும் சென்னையிலும் மேற்கொண்டார். பள்ளியில் தான் சராசரிக்கும் கீழான மாணவன் என்றும் விளையாட்டிலும் பாடத்திட்டம் சாரா நிகழ்வுகளிலும் தனக்கு நாட்டம் இருந்ததில்லை என்று அவர் கூறியுள்ளார். இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணி புரிந்தார். அவ்வேலை பிடிக்காததால் 2003ல் இந்தியாவுக்கு திரும்பிவிட்டார். நிழல்படக்காரர் ஒருவர் இவரின் முகம் நிழல்படங்களில் அழகாக தெரியக்கூடிய ஒன்று என்று சொன்னது இவர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தது என்று கூறியுள்ளார்.

இவர் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அங்கு நடிகர்களை அருகில் இருந்து அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார். இவர் பெண் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்தார். கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் நடித்துள்ளார். பீட்சா பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பல குறும்படங்களில் பணியாற்றியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை நார்வே குறும்பட தமிழ் திரைப்பட விழாவில் பெற்றார்.

இயக்குநர் செல்வராகவன் புதுப்பேட்டை படத்துக்கு திறன் தேர்வு வைத்ததில் கலந்து கொண்டு தனுசுக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதைத்தொடர்ந்து தமிழ்-கன்னட இரு மொழிப்படமான அகண்ட என்பதின் தமிழ் பதிப்பில் முன்னனி கதை மாந்தராக நடித்தார், கன்னட பதிப்பில் எதிர்மாறான கதை மாந்தராக நடித்தார். இப்படம் திரைக்கு வரவில்லை. பின்பு பிரபு சாலமனின் லீ திரைப்படத்திலும் சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு நான் மகான் அல்ல என்ற திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். இயக்குநர் சுசீந்தினே முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தன் கனவு மெய்ப்பட காரணமாக இருந்தவர் என்று கூறினார். சுசீந்திரன் இவரை தென்மேற்கு பருக்காற்று இயக்குநர் சீனு ராமசாமியிடம் அறிமுகப்படுத்தினார், பின்பு சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு அப்படத்தில் முன்னனி கதாபாத்திரம் வழங்கினார்.

2012ல் இவர் நடித்த மூன்று திரைப்படங்களும் வணிகரீதியாக பெருவெற்றி பெற்றன. சுந்தரபாண்டினில் இவர் கதைநாயகனுக்கு எதிரியாக நடித்திருப்பார். கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்திலும் பாலாஜி தரணிதரனின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும் முன்னனி கதை மாந்தராக நடித்தார். நளன் குமரசாமியின் சூது கவ்வும் என்ற படத்திலும் முன்னனி கதை மாந்தராக நடித்தார். பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

2016-ம் ஆண்டில் தொடர்ந்து 6 படங்களை நடித்து, பின்னர் 2017-ம் ஆண்டு 5 படங்களும், 2018-ம் ஆண்டு 7 படங்களில் நடித்துள்ளார்.

2018-ம் ஆண்டு இறுதியில் தனது 25-ம் படமாக சீதக்காதி திரைப்படத்தில் 75 வயது முதியவர் தோற்றத்தில் நடித்து பல சாதனைகளை புரிந்துள்ளார்.

அதன்பிற்பாடு பல திரைப்படங்களை பிரபல்ய நடிகர்களுடன் இணந்து தனது தனித் திறமைகளை காட்டியுள்ளார். அவ்வகையில் ரஜினி, கமல், விஜய் போனறவர்களோடும் அவரது நடிப்பின் சிகரம் உயர்கிறது.
ஆம் இவரின் இவ்வுயர்வை பலர் பார்த்து மிரண்டு நிற்கிறார்கள். அவ்வகையில் இவரது சினிமா பயணம் உச்சக்த்தை அடைய எமது லங்கா4.கொம் ஊடகமும் வாழ்த்துகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!