மாநாடு படத்தை பார்த்தாரா தல அஜித்??
#Cinema
Nila
3 years ago
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்த படம் பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படியான பேட்டி ஒன்றில் வெங்கட் பிரபுவிடம் மாநாடு படத்தை தல அஜித் பார்த்து விட்டாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கேள்விக்கு வெங்கட்பிரபு தல அஜித் இன்னும் மாநாடு படத்தை பார்க்கவில்லை. அடுத்த வாரத்தில் பார்க்கப் போகிறார் என உற்சாகத்தோடு பதிலளித்துள்ளார். இந்த படத்தை பார்த்து தல அஜித் எந்த மாதிரியான விமர்சனத்தை சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.