தல என்றோ வேறு பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் - நடிகர் அஜித் அதிரடி

Reha
3 years ago
தல என்றோ வேறு பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் - நடிகர் அஜித் அதிரடி

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், அதன்படி இவர் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள வலிமை திரைப்படம் அனைவரிடமும் மிக பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு கோரிக்கை வைக்கும் வகையில் நடிகர் அஜித் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் "இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ அல்லது பேசும் போதோ எனது இயற்கை பெயரான அஜித்குமார், அஜித், ஏ கே என குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்டை பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!