மீண்டும் அரசியலுக்கு களமிறங்கும் வடிவேலு..

Prabha Praneetha
3 years ago
மீண்டும் அரசியலுக்கு களமிறங்கும் வடிவேலு..

நீண்ட வருடத்திற்கு பிறகு வடிவேலு தற்போது சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அதனால் வடிவேலுக்கு தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

மேலும் பல நடிகர்களுடன் காமெடியாக நடிப்பதற்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆனால் வடிவேலு தொடர்ந்து ஹீரோவாக தான் நடிப்பேன் என கூறி தற்போது கதாநாயகனுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து வருகிறார்.

வடிவேலுவின் வசனம் ஆன நாய் சேகர் என்ற வசனத்தை மையமாக வைத்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பிறகு தற்போது வடிவேலுவுக்கு முன்னணி நடிகர்களுடன் காமெடியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தும் அதனை மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தனது படத்தில் காமெடி கதாபாத்திரத்திற்கு வடிவேலுவை அணுகியுள்ளார். ஆனால் வடிவேலு நாசுக்காக தற்போது கதாநாயகனாக படங்களில் நடித்து வருவதால் தங்கள் படத்தில் நடிக்க முடியாது என கூறியதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் வடிவேலு சிவகார்த்திகேயன் படத்தில் காமெடியாக நடிக்க மாட்டேன் என கூறி விட்டு தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் காமெடியனாக நடிப்பதற்கு 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

ஆனால் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் வடிவேலு திமுக கட்சியை சேர்ந்தவர் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பு திமுகவிற்கு இவர் பல்வேறு இடங்களில் ஆதரவாக பேசினார். அதனால் அடுத்து அதிமுக ஆட்சியை வந்து பத்து வருடங்களாக சினிமாவில் நடிக்க முடியாத அளவிற்கு சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு முழுக்க முழுக்க வடிவேலுவின் நடவடிக்கை தான் காரணம் என கூறி வந்தனர்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் திமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகவும் நடிகராகவும் உள்ளார். மேலும் வடிவேலுவும் திமுக கட்சியை சேர்ந்தவர் என்பதால் உதயநிதி ஸ்டாலின் படத்தில் காமெடியனாக நடிப்பதற்கு வடிவேலு சம்மதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் மீண்டும் திமுக கட்சியில் இணைந்து அடுத்தடுத்து பதவியின் மீதான கவனத்தை செலுத்துவார் என கூறி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!