உடல் அழுகிய நிலையில் இந்தி நடிகர் பிரம்மா மிஸ்ரா உயிரிழப்பு
அழுகிய நிலையில் இந்தி நடிகர் பிரம்மா மிஸ்ராவின் உடல் அவரின் வீட்டில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள தகவல் திரையுலகினரை பேர் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இந்தியில் வெளியான 'மிர்சாபூர்' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் பிரம்மா மிஸ்ரா என்ற இந்தி நடிகர்.
மும்பையில் அவர் தங்கி இருந்த வெர்சோவா என்கிற அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அவருடைய வீட்டில் அருகே இருந்தவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
போலீசார் அவரது வீட்டை சோதனையிட்டபோது, பிரம்மா மிஸ்ரா இறந்து அழுகிய நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஜூஹூவில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
36 வயதேயான பிரம்மா மிஸ்ரா மாரடைப்பால் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர் நவம்பர் 29 ஆம் தேதி, மருத்துவரிடம் நெஞ்சுவலிக்காக சென்றுள்ளார்.
அதற்காக மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளையும் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் பாத்ரூம் சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு இவர் உயிரிழந்துள்ளார்.
தற்போது இவரது திடீர் மறைவு குறித்து அறிந்த, இவருடைய சக நடிகர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.