GV பிரகாஷின் ''பேச்சிலர்'' திரை விமர்சனம்

Prabha Praneetha
3 years ago
GV  பிரகாஷின் ''பேச்சிலர்'' திரை விமர்சனம்
நடிகர் ஜி வி பிரகாஷ்குமார்
நடிகை திவ்யா பாரதி
இயக்குனர் சதீஷ் செல்வகுமார்
இசை ஜி.வி.பிரகாஷ்குமார்
ஓளிப்பதிவு தேனி ஈஸ்வர்

பேச்சிலராக இருக்கும் ஜிவி பிரகாஷ் நாயகி திவ்யா பாரதியை சந்திக்கும் பொழுது இருவருக்கும் திடீரென ஒரு மாற்றம் ஏற்படுகிறது. பின்

ஒரே வீட்டில் வசித்து வரும் இவர்கள், காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் எல்லை மீறுகிறார்கள். அதன்பின் இருவருக்கும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவர்களுடைய நெருக்கமே பிரிவுக்கு காரணமாக அமைகிறது. இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தமிழ் சினிமா உலகில் பல உண்மை சம்பவங்களை மையமாக வைத்து திரைப்படம் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் பேச்சிலர்.

தன்னை சுற்றி எது நடந்தாலும் சரி, தன்னால் மற்றவர்களுக்கு எது நடந்தாலும் சரி கொஞ்சம் கூட கவலைப் படாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜிவி பிரகாஷ். இவருடைய அலட்டல் இல்லாத நடிப்பு ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது ஜிவி பிரகாஷ்.

சென்னையில் இருந்து பெங்களூருக்கு வேலைக்காக செல்கிறார் ஜி.வி.பிரகாஷ். அங்கு இருவரும் ஒரே ஆபீசில் வேலை செய்கிறார்கள். 

தன் நெருங்கிய நண்பரின் உதவியுடன் திவ்யா பாரதியுடன் ஒரே வீட்டில் தங்க முயற்சி செய்கிறார் ஜிவி பிரகாஷ். ஒரே ஆபீசில் வேலை செய்வதாலும், தன் நண்பரின் சிபாரிசலும் ஜிவி பிரகாஷுடன் தங்க ஓகே சொல்கிறார் திவ்யா பாரதி.

அறிமுக கதாநாயகி திவ்யா பாரதி, முதல் படத்திலேயே தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மற்ற கதாபாத்திரங்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் தன் நண்பர்களுடன் வரும் காட்சிகள் எல்லாம் அற்புதமாக இருக்கிறது. 

அறிமுக இயக்குனர் சக்தி செல்வகுமார் பேச்சிலரின் வாழ்க்கையை சொல்ல முயற்சி செய்திருக்கிறார்.

கதைக்கு ஏற்றார்போல் கதாபாத்திரங்களையும் அருமையாக தேர்ந்தெடுத்து இருப்பது படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

ஆனால், திரைக்கதையின் நீளம் படத்திற்கு பலவீனமாக அமைந்து இருக்கிறது.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!