கதாநாயகனாக களமிறங்கும் பிக் பாஸ் முகேன் ராவ்

#TamilCinema
Prasu
3 years ago
கதாநாயகனாக களமிறங்கும் பிக் பாஸ் முகேன்  ராவ்

வெப்பம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஞ்சனா அலி கான். நீண்ட இடைவேளைக்கு பிறகு அஞ்சனா ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு மதில் மேல் காதல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பிக்பாஸ் 3வது சீசனின் டைட்டில் வின்னர் முகேன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் முகேனுக்கு ஜோடியாக பேச்சுலர் கதாநாயகி திவ்ய பாரதி நடிக்கிறார். மேலும் சாக்ஷி அகர்வால் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை ஷ்ரிடி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் முதல் பார்வையை வைத்து பார்க்கும் போது இது ஒரு காதல் படமாக இருக்கும் என்று எதர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!