விரைவில் 50-வது படத்தில் நடிக்கப் போகும் சிம்பு..

Prabha Praneetha
3 years ago
விரைவில் 50-வது படத்தில் நடிக்கப் போகும் சிம்பு..

சிம்பு சமீப காலமாக இவரது படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறாததால் பல தயாரிப்பாளர்களும் சிம்பு மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

ஆனால் அத்தனையும் மாநாடு என்ற ஒரே படம் திருப்பி போட்டு விட்டது என்று தான் கூற வேண்டும்.

தற்போது பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் சிம்புவை வைத்து படத்தை இயக்குவதற்கு முன் வந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சிம்பு தனக்கு ஆரம்பத்தில் தன்னை தூக்கி விட்ட ஒரு சில இயக்குனர்கள் மட்டும் வாய்ப்பு கொடுத்து தற்போது வரை பல படங்களில் நடித்து வருகிறார்.

சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இதற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் மேலும் ராம் சிம்புவிடம் கதை கூற அதுவும் சிம்புவுக்கு பிடித்துப்போக தற்போது 3 படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.

இதனால் தற்போது சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது சிம்பு தற்போது 47 படங்கள் நடித்துள்ளார்.

தற்போது ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார், கூடிய விரைவில் சிம்பு 50வது படத்தில் நடிக்கப்போகிறார்.

ஆனால் அதனை இயக்குபவர் யார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது சிம்புவே அவரது 50வது படத்திற்காக கதையும் திரைக்கதையும் எழுதி வருகிறார்.

அதனால் கூடிய விரைவில் சிம்புவின் 50வது படத்தை சிம்புவை இயக்கி நடிப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!