எஸ்.ஜே.சூர்யாவிற்கு குவியும் அறிவுரை
தமிழ் சினிமாவில் தற்போது பிசியாக நடித்து வரக்கூடிய நடிகர் எஸ் ஜே சூர்யா. மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா வில்லனாக வைத்து படங்கள் இயக்குவதற்கு அனைத்து இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதனால் எஸ் ஜே சூர்யாவிற்கு சினிமா மார்க்கெட் அதிகரித்துள்ளது.
ஆனால் எஸ் ஜே சூர்யா படத்தின் கதையை கேட்டு விட்டு அதில் ஒரு சில இயக்குனர்களின் படங்களில் மட்டும் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த வருடத்தில் எஸ் ஜே சூர்யா அதிகமான படங்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோலதான் மாஸ்டர் படம் வெளியான போது விஜய் சேதுபதியின் வில்லத்தனமான நடிப்பு பார்த்து அனைத்து இயக்குனர்களும் விஜய் சேதுபதி வைத்து படங்கள் இயக்குவதற்கு முன் வந்தனர்.
ஆனால் அப்போது விஜய் சேதுபதி கதைக்கு சரியாக முக்கியத்துவம் கொடுக்காததால் இவரது நடிப்பில் வெளியான லாபம், அனபெல் சேதுபதி போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தன.
இதற்கு ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதி வருடத்திற்கு அதிகமான படங்கள் நடிக்க வேண்டும் என்பதால் சரியான கதைகளை தேர்வு செய்யவில்லை என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
அதன் பிறகு விஜய் சேதுபதி படத்தின் கதையை முழுமையாக கேட்டுவிட்டு தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதிக்கு அதிகமான பட வாய்ப்புகள் வந்தது. அதேபோல் தற்போது மாநாடு படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யாவிற்கு அதிகமான பட வாய்ப்புகள் வருகிறது.
ஆனால் விஜய் சேதுபதி செய்த தவறை எஸ் ஜே சூர்யா செய்தால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது சிரமம் என சினிமா வட்டாரத்தில் இருப்பார்கள் எஸ் ஜே சூர்யாவிற்கு அறிவுரை கூறி வருகின்றனர்.