இனிமேல் இதையெல்லாம் செய்ய மாட்டேன்- சிம்பு

Prabha Praneetha
3 years ago
இனிமேல் இதையெல்லாம் செய்ய மாட்டேன்- சிம்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் இருக்கும் சிம்புவிற்கு மாநாடு படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதனால் தற்போது அனைத்து இயக்குனர்களும் சிம்புவை வைத்து படங்கள் இயக்குவதற்கு முன்வந்துள்ளனர்.

ஆனால் சிம்பு ஒரு சில படங்கள் நடித்து வருவதால் எந்த இயக்குனருக்கும் பதில் கூறாமல் அமைதியாக இருந்து வருகிறார்.

சிம்புவிற்கு தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு,கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் மற்றும் 10 தல ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

மாநாடு படத்தின் வெற்றியால் சிம்பு நடிக்கும் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்பு படத்திற்கு அதிகமான வரவேற்பு கிடைத்ததால் தற்போது தொடர்ந்து பல தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களில் சிம்புவை நேர்காணல் எடுத்து வருகின்றனர்.

மேலும் தொகுப்பாளர் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் சிம்பு பதில் அளித்து வந்தார்.

அப்போது சிம்புவிடம் தொகுப்பாளர் நீங்கள் எப்போதும் பார்ட்டி விழாக்களில் அதிகம் கலந்து கொள்கிறீர்கள் ஆனால் சமீபகாலமாக எந்த பார்ட்டி விழாக்களிலும் உங்களது புகைப்படம் காணவில்லை என கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு சிம்பு சில வருடங்களுக்கு முன்பு அனைத்து பார்ட்டி விழாக்களிலும் சென்று மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தேன்.

ஆனால் சமீபகாலமாக தனது உடலைக் குறைப்பதற்காக மது அருந்தும் பழக்கத்தை விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் அசைவ சாப்பாடு சாப்பிட்டு வந்த நான் தற்போது சைவத்திற்கு மாறி உள்ளேன் என கூறியுள்ளார். இனிமேல் என்னை பார்ட்டி விழாக்களில் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!