பாலிவுட் நடிகையின் திருமணத்தை ஒளிபரப்ப 100 கோடி!
#Cinema
#Actor
#Actress
#wedding
Prasu
3 years ago
பாலிவுட் சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவரின் திருமணமும் படு பிரம்மாண்டமாக நடக்கும். அப்படி நிறைய நடிகைகளின் திருமணத்தை நாம் பார்த்திருப்போம்.
இப்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைப்பின் திருமணம் நடிகர் விக்கி கௌஷலுடன் நடக்க இருக்கிறது.
ஜெய்பூரில் மிகவும் சீக்ரெட்டாக ஏனெனில் அவர்களது திருமணம் குறித்த எந்த தகவலும் அவ்வளவு எளிதாக வெளியே வருவதில்லை. அப்படி நமக்கு கசிந்த தகவல்களே ரசிகர்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்காக ஜெய்ப்பூரில் இவர்கள் தங்க இருக்கும் அறை மட்டும் ஒரு இரவுக்கு ரூ. 75 லட்சமாம், கத்ரீனாவுக்கு போடப்படும் SOJAT மெஹந்தி மட்டுமே ரூ. 1 லட்சத்திற்கு இருக்குமாம்.
அதேபோல் இவர்களது திருமணத்தை ஒளிபரப்ப பிரபல OTT தளம் ரூ. 100 கோடிக்கு பேசியிருப்பதாக கூறப்படுகிறது.