முதல் இடம் பிடித்து சாதனை படைத்த ஜெய் பீம்

Prabha Praneetha
3 years ago
முதல் இடம் பிடித்து சாதனை படைத்த ஜெய் பீம்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்த ஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம்.

இந்தியாவில் 2021-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள் பட்டியலை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் முதல் இடம் பிடித்துள்ளது. 

இந்தி படங்களான ஷேர்ஷா இரண்டாவது இடத்திலும், ராதே 3-வது இடத்திலும், பெல் பாட்டம் 4-வது இடத்திலும், எட்டேர்னல்ஸ் 5-வது இடத்திலும், விஜய்யின் மாஸ்டர் 6-வது இடத்திலும், சூர்யவன்சி 7-வது இடத்திலும், மற்றும் காட்சில்லா காங் 8-வது இடத்திலும், திரிஷ்யம் 2-ம் பாகம் 9-வது இடத்திலும், புஜ் : த பிரைட் ஆப் இந்தியா 10-வது இடத்திலும் உள்ளன. 

ஜெய்பீம் போலீஸ் சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் படமாக வந்தது.

இந்த படத்தை ஞானவேல் இயக்கி இருந்தார். இதில் சூர்யா வழக்கறிஞராக நடித்து இருந்தார். படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக பா.ம.க, பா.ஜனதா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!