நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் பிரார்த்தனை!

#Cinema
Nila
3 years ago
நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி - ரசிகர்கள் பிரார்த்தனை!

நடிகர் சிம்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் அவர் கடந்த சில நாட்களாக அடுத்த படமான ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் சாதாரண காய்ச்சல் மட்டுமே அவருக்கு இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட சிம்புவின் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!