71 வயது பிறந்தநாளைக் கொண்டாடிய ரஜனிகாந்த்- வைரலாகிவரும் மீம்ஸ்கள்

Nila
3 years ago
71 வயது பிறந்தநாளைக் கொண்டாடிய ரஜனிகாந்த்- வைரலாகிவரும் மீம்ஸ்கள்

தென்னிந்திய திரைப்பட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாயிருந்தார். இதையொட்டி சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைய விட்டுள்ளனர்.

மேலும் அவரது பிறந்த நாளையொட்டி இணையத்தில் மீம்ஸ்களும் வைரலாகி வருகின்றன.

பல்வேறு தரப்பினரும் ரஜினிகாந்தின் சக்சஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து சிறப்பான பல படங்களை ரஜினிகாந்த் அவரது ரசிகர்களுக்காக கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தீபாவளியையொட்டி வெளியான அண்ணாத்த படமும் அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது. இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கியிருந்தார்.

தனது வழக்கமான பாணியில் இருந்து சமீப கால படங்களில் விலகியிருந்த ரஜினிகாந்த், தற்போது அண்ணாத்த படம் மூலம் மீண்டும் தனது ரசிகர்களுக்கு பழைய பாணியில் கமர்ஷியல் படமாக கொடுத்திருந்தார். அண்ணன், தங்கை சென்டிமென்ட்டை மையமாகக் கொண்டு இந்தப் படம் வெளியான நிலையில் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தது.

குஷ்பு, மீனா என பழைய ரஜினிகாந்தின் ஜோடிகளும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தனர். இதுவும் இந்த படத்திற்கு ஒரு பிளஸ் ஆக அமைந்தது மேலும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்களின் நடிப்பும் சிறப்பான பாராட்டுக்களை பெற்றது. படம் வசூல் மழையை பொழிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் சூப்பர் ஸ்டார் தனது 71வது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். இதையொட்டி இணையதளத்தில் அவர் குறித்த மீம்ஸ்கள் தெறிக்க விடப்பட்டு வருகின்றன.

ஆண்டுக்கு ஆண்டு காலம் மட்டுமே கடந்து  செல்கிறது. ஆனால் ரஜினிக்கு மட்டும் வயது ஆகவில்லை. 71வது பிறந்தநாளை அவர் கொண்டாடி வந்தாலும் அவரது ரசிகர்கள் அவரை என்றும் இளமையாகவே பார்த்து வருகின்றனர்.

எட்டு வயதில் தலைவரின் படத்தை தான் பார்த்ததாகவும் தற்போது 24 வயதிலும் தலைவரின் படத்தை பார்த்து வருவதாகவும் மீம்ஸ் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதேபோல ஆஸ்காருக்கு ரஜினி அவார்ட் செல்வதாகவும் ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

விலங்குகளுடன் ரஜினி நடித்துள்ள படங்களின் புகைப்படங்களை வெளியிட்டு தலைவர் அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும் என்றும் ரசிகர்கள் மீம்ஸ் தெரிவித்துள்ளனர். மேலும் கடைசி பெஞ்சில் உள்ள மாணவன் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கும் போது முதல் பென்சில் உள்ள மாணவன் மற்றும் மற்ற மாணவர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதையும் வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர்.

ரஜினி பிறந்த நாளை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் மீம்ஸ்கள் தெறிக்கின்றன. பிறந்த நாளையொட்டி கடந்த ஒரு வாரமாகவே ரசிகர்கள் பல்வேறு நிகழ்வுகளை செய்து வருகின்றனர் அதில் இந்த மீம்சும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது சமீபத்திய படம் அண்ணாத்த சிறப்பான வெற்றியை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த பிறந்தநாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி இணையத்தில் மீம்ஸ்கள் தெறிக்க விடப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!