80ல் பில்லா 90ல் பாதா 2kஇல் அண்ணாத்த என மார்பில் பச்சைகுத்தி தமிழில் ரஜனிக்கு வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்

Nila
3 years ago
80ல் பில்லா 90ல் பாதா 2kஇல் அண்ணாத்த என மார்பில் பச்சைகுத்தி தமிழில் ரஜனிக்கு வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன் சிங்

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 71வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கிரிக்கெட் பிரபலங்கள் சச்சின், ஹர்பஜன் உள்ளிட்டவர்களும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹர்பஜன் தனது வாழ்த்தில் சினிமா பேட்டையின் ஒரே சூப்பர்ஸ்டார் தலைவா ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் சிறப்பான நடிகராக சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் ரஜினிகாந்த். அவரை தலைவா என்று குறிப்பிட்டு ரசிகர்கள் பெருமைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் தனது 71வது பிறந்த நாளை இன்றைய தினம் கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பர்த்டே என்ற ஹேஸ்டேக் ஐ பயன்படுத்தி சக நடிகர்களும் ரசிகர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்திய அளவில் பிரபலங்களும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் பிரபல சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது மார்பு பகுதியில் ரஜினியின் முகத்தை டாட்டூ குத்தியுள்ளார். இந்தப் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் மாரு மேல சூப்பர் ஸ்டார் என்றும் 80களின் பில்லாவும் நீங்கள்தான் 90களின் பாட்ஷாவும் நீங்கள்தான் இரண்டாயிரத்தில் அண்ணாத்தவும் நீங்கள்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா பேட்டையின் ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் ஹர்பஜன் மேலும் கூறியுள்ளார். இந்தப் பதிவு தமிழ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் ரஜினிக்கு தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

ஹர்பஜன்சிங் தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அவர் ஐபிஎல் தொடரின்போது தமிழில் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு தமிழில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!