12 அடி உயர ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்த மணமக்கள்

#Marraige
Prathees
4 years ago
 12 அடி உயர ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்த மணமக்கள்

திருமண நிகழ்வின்போது 12 அடி உயர ஊஞ்சலில் இருந்து மணமக்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமண நாள் அவர்களுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். அந்த நாளை மறக்கமுடியாத நாளாக மாற்ற, அவர்கள் சுவாரஸ்யமான நிகழ்வுகளை அதில் கொண்டுவருவர். அது பெரும்பாலும் சந்தோசத்தை தந்தாலும், சில நேரங்களில் பாதகமாக முடிந்துவிடுகிறது.

 இந்தியாவில், சத்தீஸ்கரில் நடந்த திருமணம் ஒன்றிலே இந்த விபரீதம் ஏற்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த ஒரு ஜோடி  தங்களுடைய திருமண நிகழ்வின் போது மேடைக்கு மேலே 12 அடி உயரத்தில் வட்ட வடிவிலான ஊஞ்சல் ஒன்றில் நின்றுகொண்டிருந்தனர். 

ஊஞ்சலை சுற்றி கண்கவரும் வகையில் பட்டாசுகள் வெடிக்க, கீழே நடனக்கலைஞர்கள் நடனமாட, திருமண ஜோடி உற்சாகத்துடன் ஊஞ்சலில் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் முறிந்ததில், திருமண ஜோடி 12 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தனர். இதனால் மேடையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் கீழே விழுந்தவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டுவந்தனர்.

இந்த சம்பவத்தில் மணமகன், மணமகள் இருவருக்கும் நல்வாய்ப்பாக காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4