வைரல் ஆகும் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ
#TamilCinema
Prasu
3 years ago
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றன. வலிமை திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ஏற்கனவே அறிவித்தார்.
இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது