ட்விட்டரில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களில் இளைய தளபதி முதலிடம்
2021 ஆம் ஆண்டில் டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் யார் யார் என்ற விவரம் தற்போது வெளிவந்துள்ளது. இதில் 2021 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் விஜய் முதலிடத்தில் உள்ளார்.
அவரை அடுத்து சூர்யா 4-வது இடத்திலும், ரஜினிகாந்த் 7வது இடத்திலும், தனுஷ் 9வது இடத்திலும், அஜித் 10வது இடத்திலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2021ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகைகளில் முதலிடத்தில் கீர்த்தி சுரேஷ் உள்ளார்.
அவரை அடுத்து பூஜா ஹெக்டே, சமந்தா, காஜல் அகர்வால், மாளவிகா, ரகுல்பிரீத்தி சிங், சாய்பல்லவி, தமன்னா, அனுஷ்கா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் 2021 ஆம் ஆண்டில் முதல் இடம் பிடித்த விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது