சீன செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டம் இல்லை - மத்திய அரசு

Prasu
4 years ago
சீன செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டம் இல்லை - மத்திய அரசு

கடந்த ஆண்டு இந்தியா - சீனா எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில் செப்டம்பர் 3-ம் தேதி முதற்கட்டமாக பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட 118 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்து. அதை தொடர்ந்து அடுத்த இரு கட்டங்களாக மேலும் 106 சீன செயலிகளையும் இந்திய அரசு தடை விதித்தது. 

சீன செயலிகள் இந்திய பயனர்களின் தகவல்களை திருட முயற்சித்ததாகவும், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையை பாதுகாக்கும் பொருட்டு இந்த செயலிகள் தடை செய்யப்படுவதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது. 

தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ்

இந்நிலையில் தடை செய்யப்பட்ட சீன செயலிகள் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி எம்பி மலூக் நாகர் பாராளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தடை செய்யப்பட்ட சீன செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து எந்த திட்டமும் இப்போதைக்கு அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இணைய குற்றங்களை பாதுகாப்பான பிரவுஸர்கள் மூலம்  கட்டுப்படுத்துவதற்காக மத்திய  அரசு  மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4