ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் 144 தடை உத்தரவு அமுல்!

Prabha Praneetha
4 years ago
ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் 144 தடை உத்தரவு அமுல்!

ஒமிக்ரோன் பரவலை தடுக்கும் வகையில் மும்பையில் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் காலத்தில் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாய பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் கொரோனா தடுப்பு குறித்து அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இதுவரை 13 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4