அஜித்தை முட்டாள் என திட்டிய தயாரிப்பாளர்.. கொந்தளித்த ரசிகர்கள்

Prabha Praneetha
3 years ago
அஜித்தை முட்டாள் என திட்டிய தயாரிப்பாளர்.. கொந்தளித்த ரசிகர்கள்

நடிகர் அஜித்குமார் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் வலிமை. இப்படத்தை காண அவரது ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

அதில் அஜித் பைக்கில் சாகசம் செய்யும் காட்சிகள் பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் ஒருவர் மட்டும் அதை கண்டிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல “ஆன்ட்டி இந்தியன்” என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவா தான்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தை வம்பிழுக்கும் விதமாக ஒரு பதிவை போட்டுள்ளார். வலிமை திரைப்படத்தில் அஜித் மோட்டார் சைக்கிள் ஓட்டும் விதம் மிகவும் அபாயகரமாக உள்ளது.

அதாவது இது போன்ற செயல்கள் ரசிகர்களையும் செய்யத்தூண்டும் அஜித் அவர்களே, சென்னை மாநகரில் இது போன்று பைக் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் எதிரே வருபவர்களும் பலியாகிய பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது.

வாகனத்தின் பெயரே இருசக்கர வாகனம் தான் அதை ஒரு சக்கரத்தில் ஓட்டினால் நியாயமா என்றும், நீங்கள் சினிமா ஹீரோ தான் ரியல், ஹீரோ அல்ல திருந்துங்கள் என்று கூறியுள்ளார்.

அஜித் குமார் இயல்பிலேயே ரேஸ் போட்டிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர். அவர் இது போன்று கார் ரேஸ் உள்ளிட்ட பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

மேலும் கல்லூரி மாணவர்களுக்கு கிளாஸ் எடுக்கும் அளவுக்கு திறமையானவர்.

அப்படிப்பட்ட ஒருவரை ஆதம்பாவா, இவ்வாறு பேசியுள்ளது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இதனால் அஜித்தின் ரசிகர்கள் பலரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இப்படி ஒரு கருத்தை கூறிய ஆதம்பாவாவுக்கு எதிராக அஜித்தின் ரசிகர்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!