தனுஷ் இயக்குனருடன் கைகோர்த்த ரஜினி..

Prabha Praneetha
3 years ago
தனுஷ் இயக்குனருடன் கைகோர்த்த ரஜினி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி சுமாரான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் அண்ணாத்த.

அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்த்தனர்.

அண்ணாத்த படம் வெளியானபோது விமர்சனங்கள் என்னவாக இருந்தது என்றால் ரஜினிகாந்த் படங்களில் நடித்தது போதும் இனிமேல் அவர் நடிப்பதை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்தால் நல்லது எனக்கும் இதே மாதிரி படங்களில் நடித்தால் அவருடைய பெயர் டேமேஜ் ஆகிவிடும் என்ற கருத்துக்கள் பரவலாக இருந்தது.

ஆனால் அவர் ரஜினி ஆச்சு. எப்படியாவது அதை மாற்றி ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில் பல இளம் இயக்குனர்களுடன் கதையை ரஜினிகாந்துக்கு எதுவுமே திருப்திகரமாக அமையவில்லை.

இந்நிலையில்தான் மருமகன் தனுஷ் உதவியுடன் வடக்கிலிருந்து ஒரு இயக்குனரை இறக்குமதி செய்துள்ளார்.

பூர்வீகம் தமிழ்நாடு ஆக இருந்தாலும் தற்போது பாலிவுட்டின் பிரபல இயக்குனராக இருப்பவர் பால்கி. இவர் தனுஷ் மற்றும் அமிதாப் பச்சனை வைத்து சமிதாப் என்ற படத்தை எடுத்து இருந்தார்.

இந்நிலையில் அவர் ரஜினிகாந்தை சந்தித்து ஒரு புதிய படத்திற்கான கதையைச் சொன்னதாகவும் அது ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் தெரிகிறது.

மேலும் பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்திற்கு ரஜினியுடன் இளையராஜா இணைய உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!