கமல் பேச்சுக்கு பதிலடி கொடுத்த சர்ச்சை இயக்குனர்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலகநாயகன் கமலஹாசன் இசை வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட போது, திரைத்துறையில் ஜாதி மதத்திற்கு இடம் கிடையாது.
யார் என்ன சொன்னாலும் சினிமாவிற்கு சாதி மதம் பார்க்கத் தெரியாது என்றும், விளக்கை அணைத்தால் ஒரே ஒளி மட்டுமே கிடைக்கும் என்றும் அவர் பாணியில் மேடையில் பேசினார்.
அதன் பிறகு கமலஹாசனின் இந்த கருத்திற்கு சார்பட்டா பரம்பரை இயக்குனர் பா. ரஞ்சித் மறுப்பு தெரிவித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாகவே சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அதிலும் குறிப்பாக அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை போன்றவை இவருடைய வெற்றிப்படங்களாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இவருடைய படங்களும் பெரும்பாலும் சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும், அதை சுற்றி நடக்கும் பிரச்சனைகளையும் வெளிச்சம் போட்டு காட்டும் வகையிலேயே இருக்கும்.
ஆகையால் கமலஹாசன் தற்போது பேசியிருக்கும் கருத்திற்கு பா. ரஞ்சித் அவர்கள் எதிராக பதிலளித்துள்ளார்.
ஏனென்றால் தமிழ் சினிமாவின் தொடக்கத்திலிருந்தே ஜாதி வேறுபாடு இருந்து கொண்டே இருக்கிறது என்றும், நான் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன் என்றும் பா ரஞ்சித் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி பா. ரஞ்சித் அவர்கள், சினிமாவில் அதை அவரே பலமுறை உணர்ந்து இருப்பதாகவும் பதில் அளித்துள்ளார்.
இவ்வாறு கமல்ஹாசன் பா. ரஞ்சித் இருவருக்கும் இடையே இருக்கும் வேறுபட்ட கருத்துக்களை மீடியாவில் தெரிவித்து ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறி கொண்டிருக்கின்றனர்.
அத்துடன் உலகநாயகன் கமலஹாசன் ஜாதி வேறுபாடு இருக்கக்கூடாது என்பதையும், அது சினிமாவில் இல்லை என்பதையும் தெளிவுபடுத்திய போது, பா. ரஞ்சித் குறுக்கிட்டு, அதை நானே உணர்ந்துள்ளேன் என்ன பேசியது தற்போது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.