வெங்கட் பிரபுவின் அடுத்த கதாநாயகன் இவர் தான்
சென்னை 28 என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபு தொடர்ந்து காமெடி கலந்த ஒரு எண்டர்டெயின் படங்களை மட்டுமே வழங்கி வந்தார்.
அவரது படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் சுமாரான வரவேற்பு கிடைத்து வந்தது.
இந்நிலையில் தனது வழக்கமான பாணியில் இருந்து முதமிழ் சினிமாற்றிலும் விலகி மாநாடு என்ற ஒரு மாபெரும் வெற்றி படத்தை வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்து விட்டார் வெங்கட் பிரபு. முதல் முறையாக டைம் லூப் அடிப்படையில் படத்தை உருவாக்கி அதை மக்களுக்கு புரியும்படி மிக அருமையாக வழங்கி இருந்தார்.
விமர்சனம் மற்றும் வசூல் ஆகிய இரண்டிலும் படம் பட்டையை கிளப்பியது. இதனால் வெங்கட் பிரபு மார்க்கெட் எகிற தொடங்கியது.
அதனை தொடர்ந்து அவர் அடுத்ததாக எப்போது படம் இயக்குவார்? யாரை வைத்து இயக்க போகிறார் என்பது போன்ற கேள்விகள் எழுந்து வந்தது.
இதற்கிடையில் வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்க உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
ஆனால் படத்தின் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்க உள்ள புதிய படத்தில் இளம் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இது ஒரு காதல் கதையாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
காதல் கதை என்பதால் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். மாநாடு படம் 100 கோடி வசூலைத் தாண்டியது போல இந்தப்படமும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.