2 ஹாலிவுட் படத்திற்கு மேக்கப் மேனாக வேலை பார்த்த கமல்ஹாசன்..
தமிழில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு தன்னுடைய அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கமல்ஹாசன். அவருடைய நடிப்பிற்காகவே அவர் உலக நாயகன் என்று மக்களால் அழைக்கப்படுகிறார்.
இவர் குழந்தையில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவை தன்னுடைய நடிப்பால் கட்டிப் போட்டுள்ளார்.
நடிப்பு தவிர நடனம், இயக்கம் போன்ற திரைத்துறையில் இருக்கும் அத்தனை தொழில் நுணுக்கங்களையும் இவர் கற்று தேர்ந்துள்ளார்.
இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்யாசத்தை நமக்கு காட்டும். அந்த வரிசையில் அவர் பத்து வேடங்களில் நடித்த தசாவதாரம் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அந்தப் படத்தில் அவருடைய அர்ப்பணிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
தற்போது கமல்ஹாசனைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது அதாவது அவர் ஹாலிவுட் திரைப்படத்தில் மேக்கப் ஆர்டிஸ்ட்டாக வேலை செய்துள்ளார்.
இது பற்றி கமல்ஹாசன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் படத்தில் நடிப்பது மிகவும் சுவாரஸ்யம் என்று கூறிய அவர், அகாடமி விருது பெற்ற மேக்கப் கலைஞர் மைக்கேல் ஓரிடம் ஒப்பனை சம்பந்தப்பட்ட கலையை கற்றுக் கொள்வதற்காக 30 முதல் 40 நாட்கள் வரை பயிற்சி பெற்றதாக தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற ஸ்டார் ட்ரெக் என்ற திரைப்படத்தில் தான் அவர் மேக்கப் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார்.
அதில் மேக்கப் தொடர்பான பல நுணுக்கங்களை கமல்ஹாசன் கற்றுள்ளார். அதுதவிர ராம்போ 3 என்ற ஹாலிவுட் திரைப்படத்திலும் கமல்ஹாசன் பணியாற்றியுள்ளார்.
தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தூங்காவனம் திரைப்படத்தில் அவர் நடிகை திரிஷாவுக்கு ஒருநாள் மேக்கப் கலைஞராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இப்படி அனைத்து துறையிலும் வல்லவராக இருப்பதினால் தான் அவர் உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.