பாலிவுட் நடிகருடன் உடன் ஜோடி சேர்ந்த சமந்தா..
சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தி ஃபேமிலிமேன் 2 என்ற வெப்தொடர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில் மீண்டும் அந்த தொடரின் இயக்குனர் ராஜ் மற்றும் டிகே உடன் சமந்தா இணைந்து உள்ளார்.
அவெஞ்சர்ஸ் புகழ் ருஸ்ஸோ பிரதர்ஸ் அமேசான் பிரைம் வீடியோவுக்காக சர்வதேச தொடரான சிட்டாடல் இன் இந்திய பதிப்பை தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இத்தொடரை ராஜ், டிகே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. இததொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளார்.
இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அரங்கிலும் கூட இது மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். தயாரிப்பாளர்கள் ஒரு புதிய ஜோடியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர், அப்போதுதான் சமந்தாவை முதன்முறையாக வருணுடன் சேர்த்து நடிக்க வைக்க திட்டமிட்டு உள்ளார்கள்.
இந்த அதிரடித் தொடரின் பெண் கதாநாயகியாக நடிப்பதற்கு பல தேடுதலுக்கு பிறகு நடிகை சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளாராம்.
இந்த ஜோடி முதல் முறையாக இணைவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த அதிரடி உளவு தொடர் அடுத்த ஆண்டு 2022 இல் தொடங்கப்பட்டு 2023 இல் அமேசான் ப்ரைம் வீடியோவில் திரையிடப்படும் என தெரிகிறது.
இத்தொடரை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே சமந்தா மற்றும் வருண் தவான் இருவரும் பல பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளார்கள்.
இந்த ராஜ் மற்றும் டிகே தொடரில் வருண் மற்றும் சமந்தா இருவரும் ஸ்டைலான உளவாளிகளாக நடிக்க உள்ளார்கள்.
சமந்தா தற்போது உள்ள படங்களை முடித்துவிட்டு இத்தொடரில் இணைவார் என எதிர்பார்க்கலாம்.