ஜெயலலிதா ஆவியுடன் பேசிய எஸ் வீ சேகர். ஆவி என்ன பேசியது?

Prasu
2 years ago
ஜெயலலிதா ஆவியுடன் பேசிய எஸ் வீ சேகர். ஆவி என்ன பேசியது?
இறந்த பின்னர் அந்த ஆவியுடன் பேசுவதாக சரியான விஞான விளக்கம் இல்லாமல் சிலர் கூறி வருவது கண்கூடாகும்.
இருந்தும் இப்பொழுது நித்தியானந்தா சுவாமி தொடக்கம் நம்ம கிராமத்து கறுப்பன் சாமி பூசாரி வரைக்கும் தாம் ஒரு கடவுள் என நிரூபிப்பது ஒரு பகல் திருட்டு என்பதை பலர் அறிந்தும்,  சில ஆழும் வர்க்கங்கள் போலி ஆன்மீகத்துக்குள் புதையுண்டு இருப்பதால் உண்மையான ஒரு ஆற்றல் மட்டுமே கடவுள் அது அனைவருக்கும் பொதுவானது என கூறுகின்ற நபர்களுடைய உண்மை மறைக்கப்படுகிறது.
அந்த வரிசையில் டில்லியை தனது சட்டை பாக்கெட்டில் வைத்து தமிழ் நாட்டுக்குள் சுற்றுபவர் எஸ் வீ சேகர் என்ற நாடக நடிகர். அவர் ஒரு திற‌மையான நகைசுவை நடிகர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்.
ஆம்...
பிரபல நடிகரும், அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் சமீபத்தில் இணைந்துள்ளார். 'தான் ஜெயலலிதாவின் ஆவியுடன் பேசி வருவதாக புதிதாக உருட்டியுள்ளார்.
அதிசயத்தக்க இந்த அனுபவம் குறித்து அவர் மேலும் கூறும்போது, "ஜெயலலிதாவின் பாராட்டுக்களை பெற்றிருந்த நான், அதிமுகவில் இணைந்து பணியாற்றியபோது, ஜெயலலிதாவிடம் பணம் வாங்கி செலவு செய்யாத ஒரே ஆளாக திகழ்ந்தேன்.
இறந்தவர்களின் ஆவியை தொடர்பு கொண்டு அதனுடன் பேசுவது ஓர் அறிவியல் முறை. இந்த முறையில்தான் ஜெயலலிதாவின் ஆவியுடன் பேசி வருகிறேன். இதேபோல் எனது தந்தையின் ஆவியுடனும் அவ்வபோது பேசி கொண்டிருக்கிறேன்.
ஆன்மாவுடன் பேச வேண்டுமென நாம் மட்டும் நினைத்தால் போதாது. அவர்களும் நினைக்க வேண்டும்" என்று யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் எஸ்.வி.சேகர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக , சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். அப்போதில் இருந்து அவரின் ஆவியுடன் பேசுவதாக ஒரு சாமியார், உமா சங்கர் ஐஏஎஸ் உள்ளிட்டோர் கூறி வந்தனர்.
இத்தகவலால் சிலர் அதுவும் அ தி மு க கட்சியில் உள்ளவர்கள் பயப்பிடலாம் நாம் எதற்க்கும் அன்சோம் என ஒரு பெரிய கட்ச்சிப் பிரமுகர் கூறியதும் குறிப்பிடதக்கது.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!