எதற்காக பார்திபனுக்கு தங்க விசாவை பரிசாக துபாய் கொடுத்தது?
பார்திபன் ஒரு நல்ல நடிகர், நல்ல இயக்குணர், மற்றும் ஒரு நல்ல தந்தை என புகழ் பெர்றவர்.
தனது குடும்ப சூழ் நிலையால் சினிமாவை மிகவும் நேசித்த அவர் சற்று மறை நிலவாகவே இருந்தார். இருந்தும் புலி பதுங்கி பாய்வதுபோல தற்போது அவரது சினிமாவின் கவனம் சற்று வேகம் எடுத்திருப்பதை நாம் அவரது நகர்வுகளில் காணக்கூடியதாக உள்ளது.
அதற்க்கு ஒரு முன்னணி நடிகர்தான் காரணம் என கூறப்படுகிறது.
அவரது ஊக்கமும், ஆறுதலும், அனுசரணையும் இணந்தே..
அதன் பின்னர் அவரது முயற்ச்சியில் சில வெற்றிப்படிகளைத்தொட்டு வருகிறார்.
அவ்வகையில் அவருக்கு மேலும் ஒரு புதிய குறுதியை ஊட்டியதுபோல சில தினங்ழுக்கு முன்னர் துபாயில் நடைபெற்ற ஒரு சம்பவம். அவரை நாடு, மொழி கடந்து சரசிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என காட்டி இருக்கிறது.
ஆம்...
ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர்.பார்த்திபன் பெற்றுள்ளார். சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு துபாயின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் விசாவை வழங்கினர்.
தனக்கு தங்க விசா வழங்கிய துபாய் அரசுக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து பேசிய அவர், “எனக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். துபாய் அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த சிறப்புரிமைக்கு தகுதியானவன் என்று என்னை கருதியதற்காக துபாய் அரசுக்கு அன்பும் நன்றியும்,” என்று கூறினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா என்பது நீண்ட கால குடியிருப்பு விசா முறையாகும், இது ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது, மேலும் தானாகவே புதுப்பிக்கப்படும் வசதியையும் கொண்டதாகும்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
ஆம்... இதை பார்த்திபன் ஸ்டைலில் கூறுவதானால். இந்தவிருது... கல்லெறியாமல் காய் பறிக்க முடியாது. சொல்லெறியாமல் சினிமாவில் நிலைக்க முடியாது.
ஆம் அவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் இது.
நாமும் லங்க4.கொம் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறது.