17 வருடங்களுக்கு பின்னர் விஜையும் யுவனும் இணைவார்களா?
விஜயை விட அதிக முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்தவர் யுவன்.
அத்தனை படமும் சுப்பெர் கிட்டாக ஓடியது.
இப்படி இருக்க திடீரென விஜய்யுடன் தான் இருக்கும் புதிய படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது சோசல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா கடந்த 25ஆண்டுகளில்இதுவரை விஜய்யுடன் ஒரேயொரு படத்தில்தான் பணியாற்றி இருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா – விஜய் கூட்டணி மீண்டும் இணையவில்லை.
விஜய்க்கு இணையாக முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் ‘தீனா’, ‘பில்லா’, ‘பில்லா 2’, ‘ஏகன்’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ என தொடர்ந்து பணியாற்றி வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா.
ஆனால், விஜய் படத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஜெகன் இயக்கத்தில் வெளியான ‘புதிய கீதை’ படத்தைத் தவிர இதுவரை யுவன் பணியாற்றவில்லை.
அவர்களுக்கிடையில் எந்தவித கருத்து வேரறுபாடும் இருந்ததும் இல்லை.
இந்த நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய்யுடன் உற்சாகமுடன் இருக்கும் புகைப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்திருகிறார்.
டிவிட்டர் ட்ரெண்டிங்கில் வைரலாகிக்கொண்டு வருகிறது இந்தப் புகைப்படம். அதேசமயம், விஜய்யின் ‘விஜய் 66’ அல்லது ‘விஜய் 67’ படத்தில் யுவன் பணியாற்றுகிறாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
எப்படியோ விஜயோடு யுவன் இணந்தால், நிச்சயம் அடுத்த படமும் விஜைக்கு சக்கைபோடுபோடுமென எதிர்பாற்க்கப்படுகிறது.
இக்கூட்டணி இணந்தால் கட்டாயம் இருவரின் ரசிகர்களும் கொண்டாடுவார்கள் என்பதும் நிச்சயம். நாமும் இவர்கள் கூட்டணியை வாழ்த்துவோம்.