அரசியல் தலைவைர் சீமான் இயக்கிய 5 ஹிட் திரைப்படங்கள்

#TamilCinema #Actor #Director
Prasu
2 years ago
அரசியல் தலைவைர் சீமான் இயக்கிய 5 ஹிட் திரைப்படங்கள்

சீமான் ஒரு நல்ல அரசியல் தலைவர் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் எதிர்காலத்தை கணித்து சொல்லும் ஒவ்வொரு கருத்தும் தற்காலத்திற்கு பொருந்தக்கூடிய வகையிலேயே இருக்கும். மேலும் சீமான் அரசியல் தலைவர் தாண்டி ஒரு நல்ல நடிகர் என்பது மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தின் மூலம் நிரூபித்தார். தற்போது இவர் ஐந்து வெற்றி படங்களை இயக்கி உள்ளார் என்ற தகவல் எத்தனை பேருக்கு தெரியும் இதோ,

பாஞ்சாலங்குறிச்சி:

அன்றைய காலகட்டத்தில் பிரபுவுக்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. அதற்காகவே சீமான் அவரை வைத்து பாஞ்சாலங்குறிச்சி என்னும் படத்தை இயக்கினார். இப்படத்தில் மதுபாலா, மகானதி சங்கர், சந்திரசேகர் போன்ற பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சீமானுக்கு பெரிய அளவுக்கு வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் ஒரு தனி இடத்தை கொடுத்தது.

இனியவளே:

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் பிரபுவை வைத்து இனியவளே என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் சுவலட்சுமி மற்றும் கீர்த்தி ரெட்டி, கௌதமி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

வீரநடை:

வீரநடை என்ற படத்தின் தலைப்பிற்கு ஏற்பவே அந்த காலத்தில் சத்யராஜுக்கு அனைத்து படங்களும் வீரநடை போட்டு வந்தன. அதனால் சீமான் இவரை வைத்து இயக்கினார்.

வீரநடை படத்தில் சத்யராஜ்வுடன் குஷ்பு மற்றும் உமா ஆகியோர் நடித்துள்ளனர். தேவா இசையமைத்த பாடல் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்று படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.

தம்பி:

மாதவனின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்றால் தம்பி தான். தம்பி படத்தில் பூஜா மற்றும் வடிவேலு, பிஜு மேனன், மணிவண்ணன், மனோபாலா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் சிறந்த வசனத்திற்குகாக சீமானுக்கு தேசிய விருது கிடைத்தது.

வாழ்த்துக்கள்:

தம்பி படத்தின் மூலம் வெற்றி கிடைத்ததால் மீண்டும் மாதவனை வைத்து வாழ்த்துக்கள் எனும் படத்தை இயக்கினார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக பாவனா நடித்திருந்தார். 2008 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ஓரளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு சீமான் படங்களை இயக்குவதை விட்டுவிட்டு அரசியல் களத்தில் குதித்து விட்டார். தற்போது வரை அரசியலில் கவனம் செலுத்தி எப்படியாவது ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என நினைத்து பாடுபட்டு வருகிறார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!