வடிவேலுவின் உடல் நிலை குறித்த அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை
Prasu
2 years ago
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வைகைப்புயல் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் வடிவேலுவின் தற்போதைய உடல்நிலை குறித்து ஶ்ரீ ராமச்சந்திரா மருந்துவமனை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
அவர் நன்றாக குணமடைந்து வருவதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த தினம் நாய்சேகர் ரிடர்ன்ஸ் திரைப்பட படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பு நிறைவடைந்து மீண்டும் சென்னை வந்த போது மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் வடிவேலுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
பின்னர் அவர் உடனடியாக ஶ்ரீ ராமச்சந்திரா மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.