வெளிநாட்டு ஹோட்டலில் வசமாக சிக்கிய நடிகர் ஜீவா

#Cinema
Prabha Praneetha
2 years ago
வெளிநாட்டு ஹோட்டலில் வசமாக சிக்கிய நடிகர் ஜீவா

தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்தை மிகவும் ஜாலியாக எடுத்து அதில் வெற்றியைக் காணும் இயக்குனர் யார் என்றால் அது வெங்கட் பிரபு மட்டுமே. அவர் ஒரு படம் எடுக்கிறார் என்றால் அதில் குறிப்பிட்ட சில நடிகர்களுக்கு ஒரு சின்ன கேரக்டர் ஆவது இருக்கும்.

அப்படி வெங்கட்பிரபு கேங்கில் இருக்கும் ஒரு முக்கிய நபர் நடிகர் மிர்ச்சி சிவா. ரேடியோ ஜாக்கியாக இருந்த இவர் வெங்கட்பிரபுவின் சென்னை 28 திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து இவர் ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் இவர் நடித்த தமிழ் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்து இவருக்குப் பெரும் புகழை தேடிக்கொடுத்தது.

அதையடுத்து அவர் கலகலப்பு உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். இப்போது சிவா, நடிகர் ஜீவாவுடன் இணைந்து கோல்மால் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே சுந்தர் சி இயக்கிய கலகலப்பு 2 திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து அவர்கள் இணைந்து நடித்து வரும் கோல்மால் திரைப்படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் மொரிஷியஸ் நாட்டில் நடைபெற்றது.

சிவா இருக்கும் இடத்தில் கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் மொரிஷியஸ் நாட்டில் நடந்துள்ளது. படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் அனைவரும் ஒரு பெரிய ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

பின்னர் ஷூட்டிங் முடித்து அனைவரும் கிளம்பும் இப்பொழுதுதான் ஹோட்டலுக்கு தயாரிப்பாளர் பணம் செலுத்தவில்லை என்ற விவரம் தெரிய வந்திருக்கிறது.

இதனால் ஹோட்டல் நிர்வாகம் சிவா மற்றும் ஜீவாவை பணத்தை செலுத்த வேண்டும் என்று பிடித்து வைத்துள்ளனர்.

ஒரு சில நடிகர்கள் ஏதோ காரணம் சொல்லி எஸ்கேப் ஆகி உள்ளது. அப்படி தப்பித்து வந்தவர்களில் ஒருவர் நடிகர் மனோபாலா. அதன் பிறகு அவர்கள் பணத்தை செலுத்திவிட்டு இந்தியாவுக்கு திரும்பி உள்ளனர்.

இந்த சம்பவம் தற்போது பலருக்கும் சிரிப்பை வரவழைத்துள்ளது. '[

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!