முன்னணி நடிகர்களை குறி வைக்கும் ராஷ்மிகா..
தெலுங்கு சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது இவர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ள புஷ்பா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்தப் படத்தில் இடம்பெறும் சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா ஆடியுள்ள நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.
அந்த படத்தை தொடர்ந்து அவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் கார்த்தியுடன் இணைந்து தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அப்படம் அவ்வளவாக வெற்றி பெறாமல் இருந்தாலும் ராஷ்மிகாவுக்கு தமிழில் ரசிகர்கள் நிறைய உள்ளனர். அதிலும் இந்த புஷ்பா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரும் தற்போது அவரை கொண்டாடி வருகின்றனர். இதனால் அவர் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.
தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், தனுஷ் போன்ற நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கு இவர் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்.
மேலும் சுல்தான் திரைப்படம் அவ்வளவாக ரசிகர்களை கவரா விட்டாலும் அந்தப் படத்தில் நடித்த ராஷ்மிகாவுக்கு கோடிகளில் சம்பளம் கிடைத்துள்ளது.
எப்படியாவது சென்னையில் பங்களாக்களும், சொத்துக்களும் வாங்கிக் குவிக்கும் திட்டத்தில் இருக்கிறார் ராஷ்மிகா.
இதனால் தமிழ் திரைப்படங்களில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற காரணத்தினால் அவர் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.
ராஷ்மிகா விரைவில் தன் கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு தமிழ் மொழியில் தன் கவனத்தை திருப்ப திட்டமிட்டுள்ளார்.
புஷ்பா படத்தில் தன் கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கிறங்கடித்த ராஷ்மிகா விரைவில் தமிழ் சினிமாவையும் ஒரு கலக்கு கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.