நடிகை சபனா ஆஸ்மிக்கு கொரோனா தொற்று...அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Keerthi
2 years ago
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை சபனா ஆஸ்மிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தி இருக்கிறார். இவருடைய ரசிகர்கள் அவர் மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக பதிவிட்டு வருகின்றனர்.
ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் நடிக்கும் கரண் ஜோஹரின் இயக்கத்தில் தயாராகி வரும் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்தில் சபானா ஆஸ்மி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.