வரிசைகட்டி நிற்கும் போனிகபூரின் படங்கள்..
அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் போனி கபூர். இவருடைய மனைவி பிரபல நடிகை ஸ்ரீதேவி.
இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவிகாக சில காட்சிகள் அஜித் நடித்து இருப்பார்.
மேற்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அஜித்தின் வலிமை படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.
இப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள வலிமை படம் மிகப்பெரிய வசூலை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைதொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் நெஞ்சுக்கு நீதி படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
இப்படத்தில் ஆரி அர்ஜுன், தன்யா, ஷிவானி ஆகியோர் நடித்துள்ளனர். நெஞ்சுக்கு நீதி படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் வீட்டிலே விஷேசங்க படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார்.
இப்படத்தில் அபர்ணா முரளி, ஊர்வசி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் கோயமுத்தூர் சுற்றுவட்டாரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர ஹிந்தியில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்கும் மிலி என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இது தவிர மற்றொரு ஹிந்தி படத்தையும் தயாரித்து வருகிறார். இவர் தயாரித்து வரும் தமிழ், இந்தி மொழி படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
வலிமை படத்திற்குப் பிறகு அஜித்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி போடுகிறார் போனிகபூர்.
அஜித் 61 படத்தை போனிகபூர் தயாரிக்க எச் வினோத் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மார்ச் மாதம் தொடங்க உள்ளது.