தனுஷ் இப்போது யாருடன் இருக்கிறார் தெரியுமா?
விவாகரத்து சர்ச்சைகளுக்கு பிறகு தனுஷ் தற்போது என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் என்பதை என்ற தகவல்கள் நீண்ட நாட்களாக வெளியில் வராமல் இருந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றிய தகவல்கள் கிடைக்க தொடங்கியுள்ளன.
ரஜினியின் மூத்த மருமகன் தனுஷ். இவருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி கிட்டதட்ட 18 வருடங்கள் நிறைவடைந்தன.
நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் திடீரென பிளவு ஏற்பட்டு இருவரும் தனித்தனியே தங்களுடைய பாதையை தேர்வு செய்து செல்லத் தொடங்கினர்.
இது ரஜினியை மட்டுமில்லாமல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நீண்ட நாட்களாகவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் தொடர்ந்து மோதல்கள் ஏற்பட்டு வந்த நிலையில் அவர் வழியாக விவாகரத்து பெற்று பிரிந்து தற்போது நிம்மதியாக இருப்பதாக கூறுகின்றனர்.
தற்போது அவர்களது மகன்களின் கதி என்ன ஆகப்போகிறது என்பதுதான் கேள்விக்குறி.
இப்படி இருக்கையில் தனுஷ் இப்போது தான் நான் நிம்மதியாக இருப்பதாக தன்னுடைய வட்டாரங்களில் கூறி வருகிறாராம். அப்படி யாருடன் அவர் நிம்மதியாக இருக்கிறார் என்றுதானே கேட்கிறீர்கள்.
அவருடைய அப்பா அம்மா அண்ணன் செல்வராகவன் குடும்பத்தினருடன் மனநிறைவுடன் இருப்பதாக தன்னுடைய நட்பு வட்டாரங்களில் கூறி சந்தோஷப்படுகிறாறாம்.
மேலும் இவ்வளவு நாட்களாக ஏதோ கார்ப்பரேட் கம்பெனியில் இருப்பதுபோல் இருந்தது எனவும் இப்போதுதான் இயற்கையை ரசிக்க தொடங்கியுள்ளேன் என்பதுபோல பேசியுள்ளார்.
தனுஷ் பேசியதை வைத்து பார்க்கையில் நீண்ட நாட்களாகவே அவர் ஏதோ ஒரு கஷ்டத்தை சந்தித்து வந்ததாக தெரிகிறது என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.