விரைவில் திருமண அறிவிப்பை அறிவிக்க இருக்கும் நடிகர் சிம்பு - ஜோடி யார் தெரியுமா?
தமிழ் சினிமா துறையில் பல பிரச்னைகளிலும், விமர்சனங்களிலும் அடிக்கடிக்கு அடிபட்டார் நடிகர் சிம்பு. அடுத்து நடித்த படங்கள் எல்லாமே தோல்வி, ஷூட்டிங்குக்கு வருவதில்லை, மனக்கவலை , உடல் எடை என பல விமர்சனங்களுக்கு ஆளானார் நடிகர் சிம்பு.
இதனையடுத்து, சிம்பு தனது உடல் எடையை குறைத்து கடந்த 2020ம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. ஆனால், உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய சிம்புவாக களமிறங்கியதை கண்டு ரசிகர்கள் சிம்புவை கொண்டாடினார்கள்.
அதன் பிறகு ‘மாநாடு’ படத்தில் நடித்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தற்போது ‘வெந்து தணிந்தது காடு’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்ட சில படங்களை ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார்.
ஏற்கெனவே நடிகர் சிம்பு, நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். தற்போது நடிகை ஒருவருடன் காதலில் இருப்பதாக தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன.
‘ஈஸ்வரன்’ படத்தின் நாயகி நிதி அகர்வாலை சிம்பு காதலித்து வருவதாக கூறப்படுகிறது. நிதி அகர்வால் மற்றும் சிம்பு ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்ததிலிருந்தே காதலித்து வருகிறார்களாம்.
2 வருடங்களாக ஸ்ட்ராங்காக செல்லும் இவர்கள் காதல் தற்போது லிவ்வின் ரிலேஷன்ஷிப் வரை சென்றுள்ளதாக கிசு கிசுக்கப்படுகிறது. விரைவில் இந்த காதல் ஜோடி திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கல்யாண தகவலில் ஒரு அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. மிக விரைவில் திருமண அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக சிம்பு – நிதி ஜோடி அறிவிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.