சித்தார்த்திடம் பொலிஸாா் தீவிர விசாரணை!

Prabha Praneetha
2 years ago
சித்தார்த்திடம் பொலிஸாா் தீவிர விசாரணை!

நடிகர் சித்தார்த் , சமூக வலைதளத்தில் பெட்மின்டன் வீராங்கனை தொடர்பில் கருத்து பதிவிட்ட விவகாரம் தொடர்பாக, அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளதுடன் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பஞ்சாபில், பிரதமர் மோடியின் பயணத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, பெட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தாா்.

அதில், ‘நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது’ என கூறிப்பிட்டுள்ளா்ா.

அதற்கு எதிர் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த், சாய்னா நேவலை விமர்சித்துள்ளாா். இந்த விடயம்சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ‘சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தேசிய பெண்கள் ஆணையம், டி.ஜி.பி., சைலேந்திரபாபுவுக்கு கடிதம் எழுதியதியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு இணைய குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இணைய குற்ற பிரிவு பொலிஸாா், சாய்னா நேவல் குறித்து சித்தார்த் பதிவு செய்த கருத்துகளை ஆய்வு செய்துள்ளனா்.

அதன் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ‘சம்மன்’ அனுப்பினர். ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக விசாரணை நடத்தவும் முடிவு செய்தனர்.

அதன்படி, வீடியோ தொழில்நுட்பத்தினூடாக இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் இடம்பெற்ற விசாரணைகளின்போது, ‘இழிவுப்படுத்தும் நோக்கத்தில் கருத்து பதிவு செய்யவில்லை.

அதற்காக, என் வார்த்தைகளை நான் நியாயப்படுத்தவில்லை. இதுபற்றி சாய்னா நேவலிடம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்’ என, சித்தார்த் கூறியுள்ளார்.

இவரது வாக்குமூலத்தை, தேசிய பெண்கள் ஆணையத்திற்கு அனுப்ப, பொலிஸாா் நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக, சித்தார்த் மீது, தெலுங்கானா மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.