மதிப்புக்குரிய இந்திய தமிழ்பற்றாளர் ஓவியர் புகளேந்தி அவர்கள் வரைந்த லதாமங்கேஸ்காரின் உயிருள்ள ஓவியம்.(புகைப்படம் உள்ளே )

Keerthi
2 years ago
மதிப்புக்குரிய இந்திய தமிழ்பற்றாளர் ஓவியர் புகளேந்தி அவர்கள் வரைந்த லதாமங்கேஸ்காரின் உயிருள்ள ஓவியம்.(புகைப்படம் உள்ளே )

லதா மங்கேஷ்கர்.. காற்றில் கலந்த குரல். 
என் மாணவர் பருவத்திலிருந்து ஈர்த்த இன்னிசைக் குரல் அவருடையது. 
"என் ஜீவன் பாடுது." படத்தில் அவர் பாடிய 
‘எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்’ பாடலை திரும்பத்திரும்ப எத்தனை முறைக் கேட்டும் சலிக்காத இன்னும், இன்று கேட்கும் போதும் மனதை உருக்கும் பாடல். அதற்கு முக்கியக் காரணம் அவர் இனிமையானக் குரல். அவர் பாடிய விதம். 
"காதலில் உருகும் பாடல் ஒன்று
கேட்கிறதா உன் காதினிலே 
காதலின் உயிரை தேடி வந்து
கலந்திடவா என் ஜீவனிலே"
தமிழில் அவர் பாடிய அத்தனைப் பாடல்களும் காற்று உள்ளவரை நீடித்து நிற்கும்.
அவர் இந்தியில் பாடிய பாடல்களை நான் கேட்கும் போதும். மொழி புரியாவிட்டாலும் அவர் குரலிலும் இசையிலும் லயித்து மீண்டும் மீண்டும்  கேட்பதுண்டு. 
அவர் பன்முகத் திறன்மிக்க ஆளுமை... மேதமை...
சென்று வாருங்கள் அம்மா... 
உங்கள் குரல் 
எங்கள் நெஞ்சங்களில்
என்றும் நிறைந்திருக்கும்.. 
ஓவியர் புகழேந்தி

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!