ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர் பாசிகர், பிர் மிலங்கெ, பர்தேசி பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் மேக்கோரினா என்ற பாடலுக்கு தோன்றி அனைவரையும் கவர்ந்தார். இவருடைய தந்தை 2015-ஆம் ஆண்டு பர்ஹத் அம்ரா என்பவரிடம் ரூ.21 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.
2017-ஆம் ஆண்டு திரும்ப கொடுப்பதாக தெரிவித்திருந்த அவர் இறந்துவிட்டார். அந்த கடனை அவரின் குடுத்திடம் திருப்பி கொடுக்கும் படி கடன் வழங்கியவர் கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க முன்வராததால் ஷில்பா ஷெட்டி, அவர் தாயார் சுனந்தா மற்றும் சகோதரி சமிந்தா ஷெட்டி ஆகியோர் மீது மும்பை ஜுகு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி வரும் 28-ம் தேதி ஷில்பா ஷெட்டி, சகோதரி சமிந்தா ஷெட்டி, தாயார் சுனந்தா ஷெட்டி ஆகியோர் கோர்ட்டில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டி மீது ஏற்கெனவே உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பணமோசடி வழக்கு பதிவு செய்திருந்தார். ஷில்பா ஷெட்டியின் கணவர் மீதும் ஆபாச வீடியோ தயாரித்து மொபைல் செயலி மூலம் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.