இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல்!

#Cinema
Reha
2 years ago
இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் இன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதலர் தின ஸ்பெஷலாக இன்று இந்த பாடல் வெளியாகும் என சன் பிக்ச்சர்ஸ் அறிவித்து இருந்தது. மேலும் நேற்று விஜய் - பூஜா ஹெக்டே ஆகியோர் இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகி இருந்தது. அது எதிர்பார்ப்பை இன்னும் அதிகம் ஆக்கியது.

இந்நிலையில் அரபிக் குத்து பாடல் வெளியாகும் நேரத்தை அறிவித்து இருக்கின்றனர். இன்று மாலை 6 மணிக்கு பீஸ்ட் முதல் சிங்கிளாக அரபிக் குத்து வெளிவருகிறது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!