ஹீரோயினாக அறிமுகமாகும் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த பின்னணி பாடகி ஜோனிடா காந்தி
#TamilCinema
#Actress
Prasu
2 years ago
விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் அரபிக் குத்து சமீபத்தில் வெளிவந்தது.
இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்தனர்.
பின்னணி பாடகியாக விளங்கி வரும் ஜோனிடா, இதுவரை செல்லமா, மறந்தாயே, மெண்டல் மனதில் உள்ளிட்ட பல தமிழ் பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில், பின்னணி பாடகியாக வலம் வந்த ஜோனிடா தற்போது கதாநாயகியாகவும் அறிமுகமாக இருக்கிறார்.
ஆம், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிப்பில் உருவாகி வரும் ‘ WALKING TALKING STRAWBERRY ICE CREAM ‘ எனும் படத்தில் ஜோனிடா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
இப்படத்தில் ஜோனிடாவிற்கு ஜோடியாக நடிகர் கிருஷ்ணா குமார் நடிக்கிறார். இவர் சூரரை போற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.