ஸாங்க்ய யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 50.

#history #Article #Tamil People
ஸாங்க்ய யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 50.

இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை


॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத த்விதீயோ அத்யாய:।

ஸாங்க்யயோகம்

(உண்மையறிவை துனைகொள்)

ஸம்ஜய உவாச।
தம் ததா க்ருபயாவிஷ்டமஷ்ருபூர்ணாகுலேக்ஷணம்।
விஷீதந்தமிதம் வாக்யமுவாச மதுஸூதந:॥ 2.1 ॥

சஞ்ஜயன் கூறினார்: இரக்கத்தால் நெகிழ்ந்து, கண்ணீர் நிறைந்ததால் பார்வை மறைந்து, சோகத்தில் மூழ்கியிருந்த அர்ஜுனனிடம் கிருஷ்ணர் இவ்வாறு சொல்ல தொடங்கினார்.

ஸ்ரீபகவாநுவாச।
குதஸ்த்வா கஷ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்।
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந॥ 2.2 ॥

முழுமுதற் கடவுள் (பகவான்) கூறினார்: அர்ஜுனா ! மேன்மக்களுக்கு போருந்தாததும், சொர்க்க பேற்றை தடுப்பதும், இகழ்ச்சிக்குரியதுமான மனசோர்வு இக்கட்டான இந்த நிலையில் எங்கிருந்து உன்னை வந்தடைந்தது ?

க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த நைதத்த்வய்யுபபத்யதே।
க்ஷுத்ரம் ஹ்ருதயதௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரம்தப॥ 2.3 ॥

அர்ஜுனா ! பேடி தனத்திற்கு இடம் தராதே. இது உன்னக்கு பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே ! அற்பமான இந்த மன தளர்ச்சியை விட்டுவிட்டு எழுந்திரு.

அர்ஜுன உவாச।
கதம் பீஷ்மமஹம் ஸாங்க்யே த்ரோணம் ச மதுஸூதந।
இஷுபி: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூதந॥ 2.4 ॥

அர்ஜுனன் கூறினான்: எதிரிகளை கொள்பவனே ! மது என்ற அரக்கனை கொன்றவனே ! வழிப்படதக்கவர்களான பீஷ்மரையும் துரோனரையும் எதிர்த்து நான் எப்படி பாணங்களை விடுவேன்.

குரூநஹத்வா ஹி மஹாநுபாவாந்
ஷ்ரேயோ போக்தும் பைக்ஷ்யமபீஹ லோகே।
ஹத்வார்தகாமாம்ஸ்து குருநிஹைவ
புஞ்ஜீய போகாந் ருதிரப்ரதிக்தாந்॥ 2.5 ॥

மேன்மை பொருந்திய ஆச்சாரியர்களை கொள்வதை விட பிச்சையேற்று வாழ்வது கூட நிச்சயமாக நல்லது.இந்த ஆச்சாரியர்கள் ஆசை வசபட்டவர்களாக இருந்தாலும் இவர்களை கொன்று இவர்களது ரத்தத்தில் தோய்ந்த சுகபோகங்களை இவர்களது இடத்திலேயே இருந்து கொண்டு எப்படி அனுபவிப்பது ?

ந சைதத்வித்ம: கதரந்நோ கரீயோ
யத்வா ஜயேம யதி வா நோ ஜயேயு:।
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாம:
தே அவஸ்திதா: ப்ரமுகே தார்தராஷ்ட்ரா:॥ 2.6 ॥

யாரை கொன்றபின் நாம் உயிர்வாழ விரும்ப மாட்டோமோ அந்த கௌரவர்கள் நம் முன்னால் நிற்கின்றனர். நாம் இவர்களை வெல்வது, இவர்கள் நம்மை வெல்வது இதில் எது நமக்கு சிறந்தது என்பது தெரியவில்லையே !

கார்பண்யதோஷோபஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:।
யச்ச்ரேய: ஸ்யாந்நிஷ்சிதம் ப்ரூஹி தந்மே
ஷிஷ்யஸ்தே அஹம் ஷாதி மாம் த்வாம் ப்ரபந்நம்॥ 2.7 ॥

சிறுமை என்ற கேட்டினால் நிலை தடுமாறி உள்ளேன். எது தர்மம் என்பதை அறியாமல் குழம்பி நிற்கிறேன். எனக்கு எது நிச்சயமான நன்மை தருமோ அதை சொல்வாய். நான் உனது சீடன், உன்னை சரணடைகிறேன். எனக்கு அறிவுரை சொல்வாய்.

ந ஹி ப்ரபஷ்யாமி மமாபநுத்யாத்
யச்சோகமுச்சோஷணமிந்த்ரியாணாம்।
அவாப்ய பூமாவஸபத்நம்ருத்தம்
ராஜ்யம் ஸுராணாமபி சாதிபத்யம்॥ 2.8 ॥

எதிரிகள் இல்லாததும் வளமானதுமான அரசை பெற்றாலும் தேவர்களின் தலைமை பதவியே எனக்கு கிடைத்தாலும் புலன்களை வாட்டுகின்ற எனது கவலையை அது போக்குமென்று தோணவில்லை.

ஸம்ஜய உவாச।
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஷம் குடாகேஷ: பரம்தப:।
ந யோத்ஸ்ய இதி கோவிந்தமுக்த்வா தூஷ்ணீம் பபூவ ஹ॥ 2.9 ॥

சஞ்ஜயன் கூறினார்: இவ்வாறு கூறிய பிறகு எதிரிகளை எரிப்பவனும் தூக்கத்தை வென்றவனுமாகிய அர்ஜுனன் புலன்களை வென்றவராகிய ஸ்ரீ கிருஷ்ணரிடம் நான் போரிட மாட்டேன் என்று சொல்லிவிட்டு மெளனமாக இருந்துவிட்டான்.

தமுவாச ஹ்ருஷீகேஷ: ப்ரஹஸந்நிவ பாரத।
ஸேநயோருபயோர்மத்யே விஷீதந்தமிதம் வச:॥ 2.10 ॥

மன்னா ! இரண்டு படைகளுக்கும் இடையில் தவித்து கொண்டு இருந்த அர்ஜுனனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் சற்றே சிரிப்பவர் போல் கூறலானார்.

ஸ்ரீபகவாநுவாச।
அஷோச்யாநந்வஷோசஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதாம்ஷ்ச பாஷஸே।
கதாஸூநகதாஸூம்ஷ்ச நாநுஷோசந்தி பண்டிதா:॥ 2.11 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: நீ துக்கப்பட கூடாதவர்களுக்காக துக்கபடுகிறாய். அதே வேளையில் பண்டிதர்களை போல் பேசவும் செய்கிறாய். இறந்தவர்களை பற்றியோ இருப்பவர்களை பற்றியோ அறிவாளிகள் கவலைபடுவதில்லை.

நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:।
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம்॥ 2.1
2 ॥

நான் ஒரு போதும் இல்லாமல் இல்லை. நீயும் இந்த மன்னர்களும் கூட இல்லாமல் இருந்ததில்லை. நாம் யாரும் இனி இல்லாமல் போய்விடுவோம் என்பதும் இல்லை.

தேஹிநோ அஸ்மிந்யதா தேஹே கௌமாரம் யௌவநம் ஜரா।
ததா தேஹாந்தரப்ராப்திர்தீரஸ்தத்ர ந முஹ்யதி॥ 2.13 ॥

இந்த உடம்பு எப்படி இளமையும் வாலிபமும் மூப்பும் அடைகிறதோ அப்படியே அதில் உறைகின்ற ஆன்மா வேறு உடலையும் பெறுகிறது.அறிவாளிகள் அதை கண்டு குழம்புவதில்லை.

மாத்ராஸ்பர்ஷாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ணஸுகது:கதா:।
ஆகமாபாயிநோ அநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத॥ 2.14 ॥

குந்தியின் மகனே ! புலன்களுக்கும் பொருட்களுக்கும் உள்ள தொடர்பு குளிர்-சூடு, சுகம்-துக்கம் ஆகியவற்றை தருவனவாகவே இருக்கும். ஆனால் அவை தோன்றி மறைபவை, நிலையற்றவை. அர்ஜுனா ! அவற்றை பொருத்துக்கொள்.

யம் ஹி ந வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப।
ஸமது:கஸுகம் தீரம் ஸோ அம்ருதத்வாய கல்பதே॥ 2.15 ॥

ஆண் சிறந்தவனே ! இவை ( சுகம்-துக்கம் போன்ற இரட்டைகள் ) யாரை பதற்றத்திற்கு உள்ளக்குவதில்லையோ, யார் சுக துக்கங்களை சமமாக கொள்பவனோ, யார் விவேகியோ அவன் நிச்சயமாக மரணமில்லா பெருநிலைக்கு தகுதி வாய்ந்தவன் ஆகிறான்.

நாஸதோ வித்யதே பாவோ நாபாவோ வித்யதே ஸத:।
உபயோரபி த்ருஷ்டோ அந்தஸ்த்வநயோஸ்தத்த்வதர்ஷிபி:॥ 2.16

உண்மையற்றது இருக்காது. உண்மையானது இல்லாமல் போகாது இந்த கருத்தை மகான்கள் உணர்ந்து இருகிறார்கள்.

அவிநாஷி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்।
விநாஷமவ்யயஸ்யாஸ்ய ந கஷ்சித்கர்துமர்ஹதி॥ 2.17 ॥

எதனால் இந்த உலகம் அனைத்தும் வியாப்பிக்கபட்டுள்ளதோ அது அழிவற்றது.என்பதை அறிந்துகொள். மாறாக அந்த ஒன்றை யாராலும் அழிக்க முடியாது.

அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண:।
அநாஷிநோ அப்ரமேயஸ்ய தஸ்மாத்யுத்யஸ்வ பாரத॥ 2.18 ॥

உடம்பில் உள்ள ஆன்மா என்றென்றும் இருப்பது, அழிவற்றது, அறியமுடியாதது ஆனால் உடம்புகள் முடிவு உடையது என்று சொல்லபடுகிறது. எனவே அர்ஜுனா போர் செய்.

ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஷ்சைநம் மந்யதே ஹதம்
உபௌ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே॥ 2.19 ॥

ஆன்மாவை கொலையாளி என்றும் கொலை செய்யப்பட்டது என்றும் கருதுபவர்கள் உண்மையை அறியாதவர்கள். ஆன்மா கொல்லபடுவதுமில்லை கொல்வதுமில்லை.

ந ஜாயதே ம்ரியதே வா கதாசிந்
நாயம் பூத்வா பவிதா வா ந பூய:।
அஜோ நித்ய: ஷாஷ்வதோ அயம் புராணோ
ந ஹந்யதே ஹந்யமாநே ஷரீரே॥ 2.20 ॥

இந்த ஆன்மா ஒரு போதும் பிறந்ததில்லை, இறந்ததுமில்லை, உண்டாகி மீண்டும் இல்லாமல் போவதும் இல்லை. இது பிறப்பற்றது இறப்பற்றது நிலையானது பழமையானது. ஆதலால் உடம்பு கொல்லப்பட்டாலும் ஆன்மா கொள்ளப்படுவதில்லை.

வேதாவிநாஷிநம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்।
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்॥ 2.21 ॥

அர்ஜுனா ! இந்த ஆன்மாவை அழிவற்றதாக என்றென்றும் இருப்பதாக ,பிறப்பற்றதாக, குறைவற்றதாக யார் அறிகிறானோ அவன் யாரை எப்படி கொல்வான் ? யாரை எப்படி கொல்ல செய்வான்.

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய
நவாநி க்ருஹ்ணாதி நரோ அபராணி।
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணாநி
அந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ॥ 2.22 ॥

பழைய உடைகளை களைந்துவிட்டு புதிய உடைகளை மனிதன் அணிந்துகொள்வது போல் ஆன்மா பழைய உடம்புகளை விட்டுவிட்டு புதிய உடம்புகளை ஏற்று கொள்கிறது.

நைநம் சிந்தந்தி ஷஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:।
ந சைநம் க்லேதயந்த்யாபோ ந ஷோஷயதி மாருத:॥ 2.23 ॥

ஆன்மாவை ஆயுதங்கள் வெட்டாது. தீ எரிக்காது. தண்ணீர் நனைக்காது, காற்று உலர்த்தாது.

அச்சேத்யோ அயமதாஹ்யோ அயமக்லேத்யோ அஷோஷ்ய ஏவ ச।
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுரசலோ அயம் ஸநாதந:॥ 2.24 ॥

ஆன்மாவை வெட்ட முடியாது,எரிக்க முடியாது.நனைக்க முடியாது. உலர்த்தவும் முடியாது. இது எங்கும் நிறைந்தது, என்றென்றும் இருப்பது, நிலையானது, அசைவற்றது, புராதனமானது .

அவ்யக்தோ அயமசிந்த்யோ அயமவிகார்யோ அயமுச்யதே।
தஸ்மாதேவம் விதித்வைநம் நாநுஷோசிதுமர்ஹஸி॥ 2.25 ॥

ஆன்மா காண முடியாதது. சிந்தனைக்கு எட்டாதது, மாறுபடாதது என்று சொல்லபடுகிறது. இதனை அறிந்துக்கொள் . துக்கம் உனக்கு தகாதது.

அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்।
ததாபி த்வம் மஹாபாஹோ நைவம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.26 ॥

பெரும்தோல் உடையவனே ! மனிதன் பிறப்பும் இறப்பும் உடையவன் என்று ஒருவேளை நினைப்பாயானால் அப்போதும் வருந்துவது பொருந்தாது.

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச।
தஸ்மாதபரிஹார்யே அர்தே ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.27 ॥

பிறந்தவனுக்கு மரணம் நிச்சயம், இறந்தவன் பிறப்பது உருதி, பரிகாரம் காண முடியாத இந்த விஷயத்தில் நீ கவலைப்படுவது பெருந்தாது.

அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தமத்யாநி பாரத।
அவ்யக்தநிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா॥ 2.28 ॥

அர்ஜுனா ! உயிரினங்கள் ஆரம்பத்தில் தென்படுவதில்லை, இடையில் தென்படுகின்றன. இறுதியில் தென்படாமல் போகின்றன. இவை பற்றி வருத்தம் எதற்கு ?

ஆஷ்சர்யவத்பஷ்யதி கஷ்சிதேநம்
ஆஷ்சர்யவத்வததி ததைவ சாந்ய:।
ஆஷ்சர்யவச்சைநமந்ய: ஷ்ருணோதி
ஷ்ருத்வா அப்யேநம் வேத ந சைவ கஷ்சித்॥ 2.29 ॥

இந்த ஆன்மாவை ஒருவன் ஆச்சரியமானது போல் பார்க்கின்றான், மற்றொருவன் ஆச்சரியமானது போல் பேசுகின்றான், இன்னொருவன் ஆச்சரியமானது போல் கேட்கிறான். கேட்டும் யாரும் இதனை அறிவதில்லை.

தேஹீ நித்யமவத்யோ அயம் தேஹே ஸர்வஸ்ய பாரத।
தஸ்மாத்ஸர்வாணி பூதாநி ந த்வம் ஷோசிதுமர்ஹஸி॥ 2.30 ॥

அர்ஜுனா ! எல்லா உடம்பிலும் இருக்கின்ற இந்த ஆன்மாவை ஒரு போதும் கொல்ல முடியாது.எனவே எந்த உயிரைபற்றியும் நீ வருந்துவது பொருந்தாது.

ஸ்வதர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி।
தர்ம்யாத்தி யுத்தாச்ச்ரேயோ அந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்யதே॥ 2.31 ॥

சொந்த கடமையை பார்த்தாலும் உன் தயக்கம் தகாததாகவே உள்ளது. ஏனெனில் நியாயத்திற்கான போரை விட க்ஷத்திரியனுக்கு வேறு சிறப்பு ஏதும் இல்லை.

யத்ருச்சயா சோபபந்நம் ஸ்வர்கத்வாரமபாவ்ருதம்।
ஸுகிந: க்ஷத்ரியா: பார்த லபந்தே யுத்தமீத்ருஷம்॥ 2.32 ॥

அர்ஜுனா ! தற்செயலாக நேர்ந்துள்ளதும் திறந்து இருக்கின்ற சொர்க்கவாசல் போன்றதுமான அந்த போரை புன்னியசாளிகலான க்ஷத்திரியர்கள் அடைகிறார்கள்.

அத சேத்த்வமிமம் தர்ம்யம் ஸம்க்ராமம் ந கரிஷ்யஸி।
தத: ஸ்வதர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி॥ 2.33 ॥

நியாதிற்க்கான இந்த போரில் ஈடுபடாமல் போனால் நீ கடமையிலிருந்து தவரியவனாகி புகழை இழந்து பாவத்தை அடைவாய்.

அகீர்திம் சாபி பூதாநி கதயிஷ்யந்தி தே அவ்யயாம்।
ஸம்பாவிதஸ்ய சாகீர்திர்மரணாததிரிச்யதே॥ 2.34 ॥

மக்கள் உன்னை எப்போதும் இகழ்ந்து பேசுவார்கள்.பெருமைகுரிய ஒருவனுக்கு அவமானம் என்பது மரணத்தை விட இழிவானதாகும்.

பயாத்ரணாதுபரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா:।
யேஷாம் ச த்வம் பஹுமதோ பூத்வா யாஸ்யஸி லாகவம்॥ 2.35 ॥

பயத்தினால் போரிலிருந்து நீ பின்வாங்கியதாக பெரிய வீரர்கள் நினைப்பார்கள். உன்னை புகழ்ந்த அவர்களே இகழவும் செய்வார்கள் .

அவாச்யவாதாம்ஷ்ச பஹூந்வதிஷ்யந்தி தவாஹிதா:।
நிந்தந்தஸ்தவ ஸாமர்த்யம் ததோ து:கதரம் நு கிம்॥ 2.36 ॥

உன்னுடைய எதிரிகளும் உனது திறமையை இகழ்ந்து சொல்லத்தகாத அவதூறுகளை சொல்வார்கள் .அதைவிட பெரும் துன்பம் எது உள்ளது.


நேஹாபிக்ரமநாஷோ அஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே।
ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்॥ 2.40 ॥

யோக வாழ்வில் முயற்சி வீனாதல் கிடையாது. குற்றம் கிடையாது. இதில் சிறிதளவு முயற்சி கூட பெரும் பயத்திலிருந்து காப்பாற்றுகிறது.

வ்யவஸாயாத்மிகா புத்திரேகேஹ குருநந்தந।
பஹுஷாகா ஹ்யநந்தாஷ்ச புத்தயோ அவ்யவஸாயிநாம்॥ 2.41 ॥

குரு வம்சத்தில் பிறந்தவனே ! இந்த யோக வாழ்வில் ஒன்றேயான நிச்சயமான புத்தி உள்ளது. ஆனால் உறுதி அற்றவர்களின் நோக்கங்கள் எண்ணற்றவை, பலமுகபட்டவை.

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவதந்த்யவிபஷ்சித:।
வேதவாதரதா: பார்த நாந்யதஸ்தீதி வாதிந:॥ 2.42 ॥

காமாத்மாந: ஸ்வர்கபரா ஜந்மகர்மபலப்ரதாம்।
க்ரியாவிஷேஷபஹுலாம் போகைஷ்வர்யகதிம் ப்ரதி॥ 2.43 ॥

போகைஷ்வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்।
வ்யவஸாயாத்மிகா புத்தி: ஸமாதௌ ந விதீயதே॥ 2.44 ॥

அர்ஜுனா ! விவேகமற்றவர்கள், வேதங்களை பற்றிய வாதங்களில் மகிழ்பவர்கள், உலக சுகங்களை தவிர வேறு இல்லை என்று வாதிடுபவர்கள், காமம் நிறைந்தவர்கள், சொர்க்க சுகத்தை நாடுபவர்கள் –இத்தகையோரின் வார்த்தைகள் வினைபயனின் காரணமாக புதிய பிறவியை தருவது, சுகத்தையும் அந்தஸ்தையும் அடைவதற்கான பல்வேறு கிரியைகள் நிறைத்தது, சொல் ஜாலங்கள் மிக்கது, சுகத்திலும் அந்தஸ்திலும் பற்று கொள்பவர்களுக்கு உறுதியான புத்தி உண்டாவதில்லை.

த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுந।
நிர்த்வந்த்வோ நித்யஸத்த்வஸ்தோ நிர்யோகக்ஷேம ஆத்மவாந்॥ 2.45 ॥

அர்ஜுனா ! வேதங்கள் முக்குண மயமான உலகை பற்றியவை, நீ மூன்று குணங்களையும் கடந்தவனாக, இருமைகளை கடந்தவனாக ,எப்போதும் சமநிலையில் இருப்பவனாக, தேடவும் பாதுகாக்கவும் செய்யாதவனாக, உன்னிலேயே நிலை நிற்பவனாக ஆவாய்.

யாவாநர்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே।
தாவாந்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜாநத:॥ 2.46 ॥

எங்கும் வெள்ளபெருக்கு நிறைந்திருக்கையில் ஏறி நீரால் எவ்வளவு பயன் இருக்குமோ அவ்வளவு பயன் தான் உண்மையை அறிந்த சான்றோனுக்கு வேதங்களில் இருக்கும்.

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந।
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோ அஸ்த்வகர்மணி॥ 2.47 ॥

வேலை செய்வதில் மட்டுமே உனக்கு உரிமை உண்டு, பலன்களில் ஒருபோதும் இல்லை. வினைபயனை உண்டாக்குபவன் ஆகிவிடாதே. வேலை செய்யாமல் இருக்கவும் விரும்பாதே.

யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய।
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே॥ 2.48 ॥

பொருளாசையை வென்றவனே ! யோகத்தில் நிலை பெற்றவனாக, பற்றை விட்டு, வெற்றி தோல்விகளில் சமமாக இருந்துகொண்டு கடமைகளை செய். சமநிலையில் நிற்பதே யோகம் என்று சொல்லபடுகிறது.

தூரேண ஹ்யவரம் கர்ம புத்தியோகாத்தநம்ஜய।
புத்தௌ ஷரணமந்விச்ச க்ருபணா: பலஹேதவ:॥ 2.49 ॥

அர்ஜுனா ! புத்தி யோகத்தை விட மிக சாதாரண செயல் நிச்சயமாக மிகவும் கீழானது. எனவே புத்தியில் சரணடை. பலனை நாடுபவர்கள் கீழானவர்கள்.

புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே।
தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஷலம்॥ 2.50 ॥

புத்தி யோகத்தில் நிலை பெற்றவன் இந்த உலகில் புண்ணிய பாவங்கள் இரண்டையும் நீக்குகிறான். எனவே அந்த யோக நிலையை அடைவாய். யோகம் என்பது செயல்களை திறம்பட செய்வதாகும்.

கர்மஜம் புத்தியுக்தா ஹி பலம் த்யக்த்வா மநீஷிண:।
ஜந்மபந்தவிநிர்முக்தா: பதம் கச்சந்த்யநாமயம்॥ 2.51 ॥

புத்தியில் நிலை பெற்ற மகான்கள் செயலினால் உண்டாகின்ற பலனை விட்டுவிட்டு, அதனால் பிறவி தலையிலிருந்து விடுபட்டு துன்பமற்ற நிலையை நிச்சயமாக அடைகிறார்கள்.

யதா தே மோஹகலிலம் புத்திர்வ்யதிதரிஷ்யதி।
ததா கந்தாஸி நிர்வேதம் ஷ்ரோதவ்யஸ்ய ஷ்ருதஸ்ய ச॥ 2.52 ॥

உனது அறிவு எப்போது மனமயக்கமாகிய குற்றத்தை கடக்குமோ அப்போது கேட்க வேண்டியதிலும் கேட்டவற்றிலும் உனது பற்று விலகும்.

ஷ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஷ்சலா।
ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி॥ 2.53 ॥

பலவற்றை கேட்டு கலக்கம் அடைந்துள்ள உனது அறிவு எப்போது நிலையாக அசையாமல் உன்னில் நிற்குமோ அப்போது புத்தி யோகத்தை அடைவாய்.

அர்ஜுன உவாச।
ஸ்திதப்ரஜ்ஞஸ்ய கா பாஷா ஸமாதிஸ்தஸ்ய கேஷவ।
ஸ்திததீ: கிம் ப்ரபாஷேத கிமாஸீத வ்ரஜேத கிம்॥ 2.54 ॥

அர்ஜுனன் கேட்டது : கிருஷ்ணா , மனம் ஒருமுக பட்ட ஒருவனின் அடையாளம் என்ன ? புத்தி விழிபுற்றவனான அவன் எப்படி பேசுவான் ? எப்படி இருப்பான் ? எப்படி நடந்து கொள்வான்.

ஸ்ரீபகவாநுவாச।
ப்ரஜஹாதி யதா காமாந்ஸர்வாந்பார்த மநோகதாந்।
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்திதப்ரஜ்ஞஸ்ததோச்யதே॥ 2.55 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! எப்போது ஒருவன் தன்னாலேயே தன்னில் திருப்தி கொண்டு, அதனால் மனத்தின் எல்லா ஆசைகளையும் விடுகிறானோ அப்போது அவன் புத்தி யோகி என்று சொல்லபடுகிறது.

து:கேஷ்வநுத்விக்நமநா: ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:।
வீதராகபயக்ரோத: ஸ்திததீர்முநிருச்யதே॥ 2.56 ॥

யாருடைய மனம் துக்கத்தில் துவல்வதில்லையோ, சுகத்தை நாடுவதில்லையோ, பற்று பயம் கோபம் ஆகியவற்றை விட்டவன் யாரோ அவன் புத்தி விழிப்புற்ற முனிவன் என்று கூறபடுகின்றான்.

ய: ஸர்வத்ராநபிஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஷுபாஷுபம்।
நாபிநந்ததி ந த்வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.57 ॥

யார் எதிலும் பற்றில்லாதவனோ, சுகத்தில் மகிழ்வதில்லையோ, துக்கத்தை வெருப்பதில்லையோ, அவனது புத்தி நிலைபெறுகிறது.

யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோ அங்காநீவ ஸர்வஷ:।
இந்த்ரியாணீந்த்ரியார்தே அப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.58 ॥

ஆமை தனது அவயங்களை உள்ளே இழுத்து கொள்வதுபோல் எல்லா பொருட்களிளுருந்தும், புலன்களை உள்ளே இழுத்து கொள்கின்ற திறமை எப்போது ஒருவனுக்கு வாய்க்குமோ அப்போது அவனது புத்தி நிலைபெறுகிறது.

விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தேஹிந:।
ரஸவர்ஜம் ரஸோ அப்யஸ்ய பரம் த்ருஷ்ட்வா நிவர்ததே॥ 2.59 ॥

புலன்கள் பொருட்களை நாடாமல் தடுப்பவனுக்கு அனுபவங்கள் இல்லை. ஆனாலும் அவற்றின் வசீகரம் விலகுவதில்லை. ஆன்மாவை கண்ட பிறகே அந்த வசீகரம் விலகுகிறது.
யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஷ்சித:।
இந்த்ரியாணி ப்ரமாதீநி ஹரந்தி ப்ரஸபம் மந:॥ 2.60 ॥

அர்ஜுனா ! வேகம் மிக்கவையான புலன்கள் விவேகமும் விடாமுயற்சியும் உடைய மனிதனின் மனத்தை கூட வலுகட்டாயமாக இழுத்து அலைக்கழிக்கிறது.

தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:।
வஷே ஹி யஸ்யேந்த்ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.61 ॥

எல்லா புலன்களையும் வசபடுத்தி, என்னில் நிலைபெற்று, மன உறுதியுடன் இருக்க வேண்டும். யாருடைய புலன்கள் வசப்பட்டு இருக்கின்றனவோ அவனது புத்தி விழிப்புற்றதாகிறது.

த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே।
ஸங்காத்ஸம்ஜாயதே காம: காமாத்க்ரோதோ அபிஜாயதே॥ 2.62 ॥

க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:।
ஸ்ம்ருதிப்ரம்ஷாத் புத்திநாஷோ புத்திநாஷாத்ப்ரணஷ்யதி॥ 2.63 ॥

பொருட்களை நினைப்பதால் அவற்றின் மீது பற்று ஏற்படுகிறது. பற்று ஆசையாக மாறுகிறது. ஆசையால் கோபம், கோபத்தினால் மனமயக்கம், மனமயக்கதால் நினைவு நழுவுதல், நினைவு நழுவுவதால் பகுத்தறிவின் சீர்கேடு, பகுத்தறிவின் சீர்கேட்டால் மனிதன் அழிகிறான்.

ராகத்வேஷவிமுக்தைஸ்து விஷயாநிந்த்ரியைஷ்சரந்।
ஆத்மவஷ்யைர்விதேயாத்மா ப்ரஸாதமதிகச்சதி॥ 2.64 ॥

விருப்பு, வெறுப்பு நீங்கியதும், தனக்கு வசப்பட்டதுமான புலன்களால் பொருட்களை அனுபவிக்கின்ற மனபக்குவம் பெற்றவன் மன தெளிவு பெறுகிறான்.

ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே।
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஷு புத்தி: பர்யவதிஷ்டதே॥ 2.65 ॥

மனத்தெளிவு பெற்றவனிடம் இருந்து எல்லா துக்கங்களும் விலகுகின்றன. ஏனெனில் மனத்தெளிவு பெற்றவனின் புத்தி விரைவில் விழுப்புறுகிறது.

நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா।
ந சாபாவயத: ஷாந்திரஷாந்தஸ்ய குத: ஸுகம்॥ 2.66 ॥

ஒருமைபடாத மனத்தை உடையவனின் புத்தி விழிப்புறாது. புத்தி விழித்தெழாத ஒருவனால் தியானம் செய்ய முடியாது. தியானம் செய்யதவனுக்கு மன அமைதி கிடையாது. மன அமைதி இல்லாதவனுக்கு இன்பம் எங்கே ?

இந்த்ரியாணாம் ஹி சரதாம் யந்மநோ அநுவிதீயதே।
ததஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்பஸி॥ 2.67 ॥

தண்ணீரில் மிதக்கின்ற படகை காற்று இழுத்து அலைக்கழிப்பது போல், உலகியல் சுகங்களில் ஈடுபடுகின்ற புலன்களை தொடர்ந்து செல்லுமாறு மனத்தை விட்டால் அது விவேகத்தை அழிக்கிறது.

தஸ்மாத்யஸ்ய மஹாபாஹோ நிக்ருஹீதாநி ஸர்வஷ:।
இந்த்ரியாணீந்த்ரியார்தேப்யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா॥ 2.68 ॥

தோல் வலிமையில் சிறந்தவனே ! யாருடைய புலன்கள் எல்லா வழிகளிலும் பொருட்களில் இருந்து விளக்கபட்டுள்ளனவோ அவனுடைய புத்தி விழிபுற்றதாகிறது.

யா நிஷா ஸர்வபூதாநாம் தஸ்யாம் ஜாகர்தி ஸம்யமீ।
யஸ்யாம் ஜாக்ரதி பூதாநி ஸா நிஷா பஷ்யதோ முநே:॥ 2.69 ॥

எல்லா உயிர்களுக்கும் எது இரவாக உள்ளதோ, தன்னை வென்றவன் அதில் விழிப்புடன் இருக்கிறான், உயிர்கள் எதில் விழிப்புடன் உள்ளனவோ, விழிப்புணர்வு பெற்ற முனிவனுக்கு அது இரவாக உள்ளது.

ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம்
ஸமுத்ரமாப: ப்ரவிஷந்தி யத்வத்।
தத்வத்காமா யம் ப்ரவிஷந்தி ஸர்வே
ஸ ஷாந்திமாப்நோதி ந காமகாமீ॥ 2.70 ॥

முற்றிலும் நிறைந்தது, அமைதியாக இருக்கின்ற கடலை நதிநீர் எப்படி அடைகிறதோ, அப்படியே யாரை எல்லா ஆசைகளும் அடைகின்றனவோ அவன் மன அமைதி பெறுகின்றான். ஆசைவசப்பட்டவன் அமைதி அடைவதில்லை.

விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஷ்சரதி நி:ஸ்ப்ருஹ:।
நிர்மமோ நிரஹங்கார: ஸ ஷாந்திமதிகச்சதி॥ 2.71 ॥

யார் எல்லா ஆசைகளையும் விட்டு, பற்றின்றி, நான் எனது என்ற எண்ணங்கள் இன்றி வாழ்கிறானோ அவன் அமைதியை அடைகிறான்.

ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி।
ஸ்தித்வாஸ்யாமந்தகாலே அபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி॥ 2.72 ॥

அர்ஜுனா ! இது தான் இறைநிலை, இதனை அடைந்தவன் மனமயக்கதில் ஆழ்வதில்லை. அவன் இந்த நிலையில் நிலைத்து இருந்து மரணகாலத்திலாவது ஆனந்தமயமான இறைவனை அடைகிறான்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
ஸாங்க்யயோகோ நாம த்விதீயோ அத்யாய:॥ 2 ॥


ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'ஸாங்க்யயோகம்' எனப் பெயர் படைத்த இரண்டாவது அத்தியாயம் நிறைவுற்றது.

விளக்கம்:

மனிதன் ( அல்லது ) ஒரு ஜீவன் ( அல்லது ) ஒரு உயிரி என்பது ஜட உடல் மற்றும் ஆன்மா இவை இரண்டின் கூட்டமைப்பே மனிதன் அல்லது உயிரி. இதில் மனிதன் இறந்து விட்டால் மனித உடல் மட்டுமே அழியும் அதில் உள்ளே இருக்கும் ஆன்மா அழியாது.

நிர்ணயிக்கப்பட்ட கர்மத்தை ( அல்லது ) வேலையை ஒருவன் செய்தே ஆகவேண்டும். வேலை ( அல்லது ) கடமை செய்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது என்பதால் அதை செய்யாமல் விட்டால் அவனை பாவம் வந்து சேரும். மேலும் அனைத்து கொடுக்கப்பட்ட வேலையை / கடமையை செய்ய வெறுப்போ விருப்போ கொள்ள கூடாது. அவ்வாறு விருப்பு வெறுப்பு கொள்ளாமல் இருந்தால் மனம் அமைதியாக இருக்கும். மனம் அமைதியாக இருந்தால் தான் புத்தி விழித்தெழும். புத்தி விழித்தெழுந்தால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறைவனை நோக்கி முன்னேறலாம்.

ஆசை, காமம், கோபம் இவற்றை முற்றிலும் விட வேண்டும். இவை மூன்றும் தான் மனிதனை அங்கும் இங்கும் இழுத்து அலைக்கழிக்கிறது. ஆகையால் இந்த மூன்றையும் விட்டு மனத்தை அமைதியாக நிலையாக வைத்து தனது கடமைகளை விறுப்பு வெறுப்பு இல்லாமல் செய்ய வேண்டும்.

ஒரு வேலையை செய்து விட்ட பிறகு அந்த வேலையின் முடிவு தோல்வியாக இருந்தாலும் அதற்காக மிகுந்த வருத்தம் கொள்ள வேண்டாம். ஏனெனில் அந்த வேலையை அவன் எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாமல் முழுமையாக செய்து இருக்கிறான். அதன் பலனில் / முடிவில் அவனின் அதிகாரம் இல்லை. இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

“கடமையை கண்ணும்கருத்துமாக செய்வதற்கு மட்டுமே நமக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலனில் எந்த வித அதிகாரமும் இல்லை.”

இன்பம் – துன்பம், சூடு – குளிர், கோடை – மழை, சுகம் – துக்கம் இவை இயற்கையிலிருந்து தோன்றுகின்றன. இவற்றால் மனம் பாதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். அதாவது இவை நிலையானவை அல்ல. தோன்றி மறைபவை.

இன்பம் வரும் போது மிகுந்த இன்பத்தை அடைவதும் துன்பம் வரும்போது மிகுந்த துன்பத்தில் ஆழ்ந்து விடுவதும் நல்ல கதிக்கு ஒரு மனிதனை கொண்டு செல்லாது. இங்கே ஏற்படுகின்ற இன்பமும் துன்பமும் தற்காலிகமானவை. அவற்றில் ஆழ்ந்துவிட கூடாது. இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனில் இவை இயற்கையிலிருந்து தோன்றுபவை. இறைவனை அடைந்த பிறகு கிடைக்கும் இன்பமே நிரந்தரமானது. அந்த நிரந்தரமான இன்பத்தை அடைய இறைவனை நோக்கி முன்னேற வேண்டும்.

தொடரும்....